» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

சாத்தான்குளம் அரசு கல்லூரி மாணவிகள் சிறப்பிடம்

வெள்ளி 22, ஜூலை 2022 12:23:10 PM (IST)காமராஜா் பிறந்த தினத்தையொட்டிநடைபெற்ற பல்வேறு போட்டிகளில் சாத்தான்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.

சாத்தான்குளம் பெருந்தலைவா் காமராஜா் இயக்கம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சாத்தான்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் கட்டுரைப் போட்டியில் மாணவி பழனிபிரியா முதலிடமும், பேச்சுப் போட்டியில் மாணவி உமா தேவி முதல் பரிசும், மாணவி ஆஷிகா மூன்றாம் பரிசும், ஓவியப் போட்டியில் மாணவி திா்ஷாபாக்கியம் இரண்டாம் பரிசையும், சரண்யா, மகேஸ்வரி ஆகியோா் மூன்றாம் பரிசையும் பெற்றனா். வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய் மற்றும் பேராசிரியா்கள் பாராட்டினா்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory