» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாலுமாவடி காமராஜ் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா!
சனி 16, ஜூலை 2022 3:14:32 PM (IST)

நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் 120-வது பிறந்த நாள் விழா பள்ளித் தலைவர் அழகேசன் தலைமையில் நடைபெற்றது.
பள்ளிக் கல்விக் கமிட்டி உறுப்பினர் இராம சாமி முன்னிலை வகித் தார்.விழாவில் பள்ளிச்செய லர் நவநீதன் வரவேற்று பேசினார்.10,12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் பரிசு பெற்ற மாணவர்களுக்கு பணிநிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் தேவதாசன் பரிசு வழங்கி மாணவர்களை பாராட்டினார். இராமலெட்சுமி அம்மாள் நினைவாக காமராஜ் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் ஆவண எழுத்தர் முத்தணைந்த பெருமாள் 11ஆம்வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தமிழ் வழி மற்றும் ஆங்கிலவழியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களைப் பாராட்டி பரிசு வழங்கி 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை பாராட்டி ஆசிரியர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கினார்.
நெய்விளை அகஸ்டின் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் இடங்களை பெற்ற மாணவர்கள் மற்றும் எட்டாம் வகுப்பு தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களை பாராட்டி ஊக்கப்பரி சாக ரூ.9000 வழங்கினார். விழாவில் மாணவர்களது கலை நிகழ்ச்சிகள் மற்றும் சன்டிவி, கலைஞர் டிவி புகழ் . மு. இராஜதுரை (முதல்வர், இராஜலெட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தூத்துக்குடி) தலைமையில் சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெற்றது.
விழாவில் நாலுமாவடி ஊர் பிரமுகர்கள் லோகநாதன், தாமோதரன், தனசேகரன், சுதாகர், அறிவழகன், பொன்துரை, சுதாகரன், பாலகண்ணன், விக்னேஷ், அஜய் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப் பித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளிச்செயலர் நவநீதன் வழிகாட்டுதலின் படி தலைமை ஆசிரியர் திருநீலகண்டன், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர். விழா முடிவில் உதவிதலைமை ஆசிரியை இரா. மாலதி நன்றி கூறினார். முதுகலை ஆசிரியை சிவசாந்தி, முதுகலை ஆசிரியர் கேசவஆனந்தபிரகாஷ், மற்றும் பட்டதாரி ஆசிரியை கலைச்செல்வி ஆகியோர் விழாவினை தொகுத்து வழங்கினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மூக்குபீறி தூய மாற்கு பள்ளி மாணவர்களின் நாட்டு நலப் பணித்திட்ட சிறப்பு முகாம்!
ஞாயிறு 1, அக்டோபர் 2023 10:23:39 AM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளி நாட்டு நலப் பணித்திட்ட 10 நாட்கள் சிறப்பு முகாம்!
சனி 30, செப்டம்பர் 2023 12:15:35 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் புள்ளிவிவர பகுப்பாய்வு பயிற்சி!
புதன் 27, செப்டம்பர் 2023 5:29:37 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் தொழில்முனைவோர் பயிற்சி பட்டறை!
புதன் 27, செப்டம்பர் 2023 4:36:39 PM (IST)

நாசரேத் சமுதாய கல்லூரியில் பரிசளிப்பு விழா!
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 3:32:41 PM (IST)

மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் ஊக்கப்படுத்துதல் கருத்தரங்கு!
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 3:27:49 PM (IST)
