» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை : விண்ணப்பங்கள் வரவேற்பு

வெள்ளி 20, ஆகஸ்ட் 2021 11:02:12 AM (IST)தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 2021-22ம் ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.

இது தொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 2021-22ம் ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான இணையதள விண்ணப்பங்கள் 19.08.2021 அன்று வெளியிடப்பட்டது.  தமிழ்நாட்டில் மீன்வளத் தொழிற்கல்வியை வழங்கி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகளை கொண்டு மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தோடு தமிழ்நாடு அரசால் இப்பல்கலைக்கழகம் நாகப்பட்டினத்தில் நிறுவப்பட்டது.

தற்போது இப்பல்கலைக்கழகத்தில் உள்ள 12 கல்லூரிகளின் மூலம் 6 மீன்வளம் சார்ந்த 4 வருட பட்டப்படிப்புகள் மற்றும் 4 தொழிற்சார் பட்டப்படிப்புகள் என மொத்தம் 10 பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பு (பி.எப்.எஸ்சி) தூத்துக்குடி, பொன்னேரி, மற்றும் தலைஞாயிறு கல்லூரிகளில் வழங்கப்படுகின்றன.  நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வள பொறியியல் கல்லூரியில் மீன்வளப் பொறியியல் மற்றும் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் என இரண்டு பிரிவுகளில் இளநிலை தொழில்நுட்ப கல்வி (பி.டெக்) வழங்கப்படுகின்றது.

பல்கலைக்கழகத்தின்; வாணியன்சாவடி OMR வளாகத்தில் உள்ள மீன்வள உயிர் தொழில் நுட்ப நிலையத்தில் இளநிலை தொழில் நுட்பவியல் (உயிர்  தொழில் நுட்பவியல்) மற்றும் இளநிலை வணிக நிர்வாகவியல் (மீன்வள வணிக மேலாண்மை) படிப்புகள் வழங்கப்படுகின்றன. மேலும் சென்னை மாதவரம் வளாகத்தில் உள்ள மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவு தொழில்நுட்ப கல்லூரியில் இளநிலை தொழில் நுட்பவியல் (உணவு தொழில்நுட்பவியல்) வழங்கப்படுகின்றது. மேலும், பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட (UGC Approved) 3 வருட இளநிலை தொழிற்சார் பட்டப்படிப்புகள் தொழிற்சார் மீன்பதன நுட்பவியல், தொழிற்;சார் மீன்பிடி நுட்பவியல், தொழிற்சார் நீர்வாழ் உயிரின வளர்ப்பு மற்றும் நீர்வாழ் உயிரின நோய் மேலாண்மை ஆகிய 4 பிரிவுகளில் சென்னை மாதவரம், முட்டுக்காடு மற்றும் மண்டபம் ஆகிய தொழிற்கல்வி நிலையங்களில் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த கல்வி ஆண்டில் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்களுக்கு 349 இடங்களும், வெளிமாநிலத்தை சார்ந்த மாணவர்களுக்கு 21 இடங்களும், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு 14 இடங்களும், மற்றும் வெளிநாட்டினர்களுக்கு 5 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. மேலும், மீனவர்களின் குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவின் கீழ் பி.எப்.எஸ்.சி பட்டப்படிப்பிற்கு ஆறு இடங்களும் பி.டெக்.(மீன்வளப் பொறியியல்) பட்டப்படிப்பிற்கு ஒரு இடமும் கூடுதலாக வழங்கப்படுகின்றது. இப்பிரிவின் கீழ் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு கல்விக்கட்டணம், விடுதிக்கட்டணம் மற்றும் உணவுக்கட்டணம் ஆகிய அனைத்தும் தமிழ்நாடு மீனவர் நலவாரியம் மூலம் வழங்கப்படுகிறது. மீனவ சமுதாயத்தை சார்ந்த மாணவர்கள் இந்த வாய்;ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பல்கலைக்கழக்கத்தின் துணைவேந்தர் முனைவர்.கோ.சுகுமார் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

இப்பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்ந்து பயில 19.08.2021 தேதி முதல் பல்கலைக்கழக இணையதளம் (www.tnjfu.ac.in) மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் 19.09.2021 ஆகும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. சிறப்பு பிரிவின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்கள் மட்டும் அதற்கான தகுதி சான்றிதழ்களை இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

விண்ணப்பித்த மாணவர்களுக்கு மதிப்பெண்கள் அடிப்படையில், தரவரிசைப்பட்டியல் 23.09.2021 தேதி அன்று வெளியிடப்படும்.  மேலும், பொது கலந்தாய்வானது இணையதளம் வாயிலாக மட்டுமே நடைபெறும் மற்றும் சிறப்பு பிரிவின் கீழ் விண்ணப்பித்த மாணவர்களுக்கு மட்டும் நேரடி கலந்தாய்வு நடைபெறும் என்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் அவர்கள் தெரிவித்துள்ளார். கலந்தாய்வு தேதியானது பின்னர் அறிவிக்கப்படும். மேலும் தகவல் மற்றும் விபரங்கள்;  பெற தொலைபேசி (04365-256430), அலைபேசி (9442601908) மற்றும் மின்னஞ்சல் ([email protected]) மூலமாக அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளலாம் என  செ்யதிக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory