» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு சாத்தியக் கூறுகள் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

திங்கள் 19, அக்டோபர் 2020 3:36:39 PM (IST)

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

மத்திய அரசு நாடு முழுவதும் முறையான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளுடன் பள்ளிகளைத் திறந்து கொள்ளலாம் என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.  அதன் அடிப்படையில் சில மாநிலங்களில் அக்டோபர் 15-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. எனினும் தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதா என நவம்பர் 11-ம் தேதிக்குள் அரசிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்குமாறு பள்ளிக் கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார், பள்ளிக்கல்வி ஆணையர் வெங்கடேஷ்  பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குனர் பழனிசாமி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்நிலையில், பள்ளிகள் திறப்பது தொடர்பாக முதலமைச்சர் தான் அறிவிப்பார் என்றும்,  பள்ளிகள் திறப்பதற்கு தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகே முடிவு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


மக்கள் கருத்து

CCC DDDOct 19, 2020 - 08:17:32 PM | Posted IP 108.1*****

Same things take place in St Thomas School

VVV SWEOct 19, 2020 - 08:16:40 PM | Posted IP 108.1*****

உயர் நீதிமன்ற உத்தரவையும், அரசு உத்தரவையும் காற்றில் பறக்க விட்ட தூத்துக்குடி St THomas ஸ்கூல் Corona காலத்தில் பள்ளிகளை திறக்காத காலத்தில், சென்னை உயர்நீதிமன்றம், பள்ளி கட்டணத்தில் 75 சதவிகிதம் மட்டுமே வசூலிக்க வேண்டும், அதையும், பள்ளிகள் திறக்காத காலத்தில் 40 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும், மீதம் 35 சதவீதம் பள்ளி திறந்த பிறகு மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் ஆணை பிறபித்து உள்ளது, நமது தமிழக அரசும் இதையே பள்ளிகள் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து உள்ளது. ஆனால் தூத்துக்குடியில் இயங்கி வரும் St THomasபள்ளி, இந்த உத்தரவுகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு, மாணவர்களின் பள்ளி கட்டணத்தில் 100 சதவீதம் உடனே கட்ட வேண்டும் என பெற்றோர்களை நிற்பந்திக்கிறது. கட்ட தவரும் மாணவர்களுக்கு online வகுப்பை தடை செய்கிறது St THomas பள்ளி நிர்வாகம். இதனால் பல பெற்றோர்கள் செய்வதறியாது வேறு வழி இல்லாமல் St THomas பள்ளி கேட்க்கும் 100 சதவீத கட்டணத்தை கட்ட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளபடுகிறார்கள். இது குறித்து Thoothukkui CEO விடம் பலமுறை புகார் கொடுத்தும் மாவட்ட நிர்வாகம் St THomas பள்ளி நிர்வாகத்தை கண்டித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் St THomas பள்ளி அரசு ஆனையையும், உயர் நீதிமன்ற உத்தரவையும் முற்றிலுமாக அலட்சியம் செய்து அடாவடியாக மாணவர்களின் பெற்றோர்களிடம் கட்டணங்களை வசூலித்து கொண்டு வருகிறார்கள். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு St THomas பள்ளியை கண்டித்து உயர் நீதிமன்ற உத்தரவை அமல் படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் விரும்புகிறார்கள்

DJJNOct 19, 2020 - 03:39:34 PM | Posted IP 162.1*****

உயர் நீதிமன்ற உத்தரவையும், அரசு உத்தரவையும் காற்றில் பறக்க விட்ட தூத்துக்குடி VIKASA ஸ்கூல் Corona காலத்தில் பள்ளிகளை திறக்காத காலத்தில், சென்னை உயர்நீதிமன்றம், பள்ளி கட்டணத்தில் 75 சதவிகிதம் மட்டுமே வசூலிக்க வேண்டும், அதையும், பள்ளிகள் திறக்காத காலத்தில் 40 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும், மீதம் 35 சதவீதம் பள்ளி திறந்த பிறகு மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் ஆணை பிறபித்து உள்ளது, நமது தமிழக அரசும் இதையே பள்ளிகள் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து உள்ளது. ஆனால் தூத்துக்குடியில் இயங்கி வரும் Vikasa பள்ளி, இந்த உத்தரவுகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு, மாணவர்களின் பள்ளி கட்டணத்தில் 90 சதவீதம் உடனே கட்ட வேண்டும் என பெற்றோர்களை நிற்பந்திக்கிறது. கட்ட தவரும் மாணவர்களுக்கு online வகுப்பை தடை செய்கிறது Vikasa பள்ளி நிர்வாகம். இதனால் பல பெற்றோர்கள் செய்வதறியாது வேறு வழி இல்லாமல் Vikasa பள்ளி கேட்க்கும் 90 சதவீத கட்டணத்தை கட்ட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளபடுகிறார்கள். இது குறித்து Thoothukkui CEO விடம் பலமுறை புகார் கொடுத்தும் மாவட்ட நிர்வாகம் Vikasa பள்ளி நிர்வாகத்தை கண்டித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் Vikasa பள்ளி அரசு ஆனையையும், உயர் நீதிமன்ற உத்தரவையும் முற்றிலுமாக அலட்சியம் செய்து அடாவடியாக மாணவர்களின் பெற்றோர்களிடம் கட்டணங்களை வசூலித்து கொண்டு வருகிறார்கள். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு Vikasa பள்ளியை கண்டித்து உயர் நீதிமன்ற உத்தரவை அமல் படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் விரும்புகிறார்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory