» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
மத்திய அரசு துறைகளில் 14,582 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
வியாழன் 12, ஜூன் 2025 4:47:07 PM (IST)
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ள 14,582 குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பணியிடங்களுக்கான தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் வேலைவாய்ப்பு அறிவிப்புக்காக காத்திருந்த பட்டதாரி இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ள 14,582 குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம்(எஸ்எஸ்சி) ஜூன் 9 ஆம் தேதி வெளியிட்டுள்ளது. இதற்கு ஆர்வமுள்ள பட்டதாரி இளைஞர்களிடம் ஜூலை 4 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளம்பர எண்.HQ-C11018/1/2025-C-1
தேர்வு: SSC- Combined Graduate Level Exam - 2025
குரூப் ‘பி’ பதவிகள்
பதவி: Assistant Section Officer, Assistant / Assistant Section Officer, Inspector of Income Tax, Inspector,(Central Excise), Inspector (Preventive Officer), Inspector (Examiner), Assistant Enforcement Officer, Sub Inspector CBI, Inspector, Section Head
சம்பளம்: மாதம் ரூ. 44,900 - 1,42,400
பதவி: Assistant / Assistant Section Officer, Executive Assistant, Research Assistant, Divisional Accountant, Sub Inspector, Sub-Inspector/Junior Intelligence Officer, Junior Statistical Officer, Statistical Investigator Grade-II, Office Superintendent.
சம்பளம்: மாதம் ரூ. 35,400 - 1,12, 400
குரூப் ‘பி’ பதவிகள்
பதவி: Assistant / Assistant Section Officer, Executive Assistant, Research Assistant, Divisional Accountant, Sub Inspector, Sub-Inspector/ Junior Intelligence Officer, Junior Statistical Officer
சம்பளம்: மாதம் ரூ. 35,400 - 1,12,400
குரூப் ‘சி’ பதவிகள்
பதவி: Auditor, Accountant, Accountant/ Junior Accountant
சம்பளம்: மாதம் ரூ. 29,200 - 92,300
பதவி: Postal Assistant/ Sorting Assistant, Senior Secretariat Assistant/ Upper Division Clerks, Senior Administrative Assistant, Tax Assistant, Sub-Inspector
சம்பளம்: மாதம் ரூ. 25,500 - 81,100
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில குறிப்பிட்ட பதவிகளுக்கு கூடுதல் தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயதுவரம்பு: 1.8.2025 தேதியின்படி கணக்கிடப்படும். அரசுவிதிகளின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் , மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: தேர்வானது முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். முதல் நிலை தேர்வானது கணினி வழித் தேர்வு மூலம் நடத்தப்படும். அதில் தேர்வானவர்களுக்கு முதன்மைத் தேர்வானது எழுத்துத் தேர்வு முறையில் நடத்தப்படும். சில பதவிகளுக்கு கூடுதல் தகுதித் தேர்வும் நடத்தப்படும்.
முதல்நிலைத் தேர்வு 200 மதிப்பெண்கள் கொண்டது. இதில் General Intelligence and Reasoning, General Awareness, Quantitative Aptitude, English Comprehension ஆகிய பகுதிகளில் இருந்து தலா 25 கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும். இதற்கான தேர்வு கால அளவு 1 மணி நேரம். இதில் தகுதி பெறுபவர்கள் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
முதன்மைத் தேர்வு 390 மதிப்பெண்கள் கொண்டது. இதில் Mathematical Abilities மற்றும் Reasoning and General Intelligence பிரிவில் தலா 30 கேள்விகளும், English Language and Comprehension பிரிவில் 45 கேள்விகளும், General Awareness பிரிவில் 25 கேள்விகள் என 130 கேள்விகள் கேட்கப்படும். Computer Knowledge பிரிவில் 20 கேள்விகள் கேட்கப்படும். அதன்பின்னர் தட்டச்சு தேர்வு நடைபெறும்.
இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் பதவிகளுக்கான உடற்தகுதி மற்றும் உடற்திறன் தகுதியை அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
முதற்கட்ட தேர்வு நடைபெறும் மாதம் : ஆகஸ்ட் - 2025
இரண்டாம் கட்ட தேர்வு நடைபெறும் மாதம்: டிசம்பர் 2025
தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, சேலம், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் புதுச்சேரி,
விண்ணப்பிக்கும் முறை: https://ssc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100. இதில் எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 4.7.2025
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொதுத்துறை வங்கிகளில் 1,007 பணியிடங்கள்: ஜூலை 21க்குள் விண்ணப்பிக்கலாம்!
சனி 5, ஜூலை 2025 12:05:50 PM (IST)

மத்திய அரசு துறைகளில் 3,134 காலி பணியிடங்கள்: எஸ்.எஸ்.சி அறிவிப்பு
புதன் 25, ஜூன் 2025 10:36:10 AM (IST)

மீன்வளத் துறையில் பணியிடங்கள் : ஆட்சியர் தகவல்
சனி 21, ஜூன் 2025 7:36:44 PM (IST)

ஆவினில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு நேரடி நியமன தேர்வு
திங்கள் 16, ஜூன் 2025 4:56:01 PM (IST)

விமானப் படையில் 153 பணியிடங்கள் : ஜூன் 15 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு
திங்கள் 2, ஜூன் 2025 5:22:18 PM (IST)

எஸ்பிஐ வங்கியில் மாதம் ரூ.48,480 சம்பளத்தில் 2964 பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு!
வியாழன் 22, மே 2025 5:44:22 PM (IST)
