» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
சவுதி அரேபிய மருத்துவமனைகளில் பணியிடங்கள் : பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 18, மார்ச் 2025 12:01:03 PM (IST)
சவுதி அரேபிய மருத்துவமனைகளில் பணிபுரிய விருப்பம் உள்ள பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தலைவர் (ம) நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் இரண்டு வருட பணி அனுபவத்துடன் B.sc Nursing - யில் தேர்ச்சி பெற்று 35 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.
இவர்களுக்கான நேர்காணல் வருகிற 27.04.2025 முதல் 30.04.2025 வரை கொச்சியில் (KOCHI) நடைபெற உள்ளது. மேற்படி பணியாளர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைதளமான www.omcmanpower.tn.gov.in – ல் கண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் ஊதியம் மற்றும் பணி பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் (6379179200) (044-22502267) மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் வலைதளத்தில் தவறாமல் பதிவுசெய்துகொண்டு தங்களின் சுய விவர விண்ணப்பப்படிவம், கல்விச்சான்றிதழ் பாஸ்போட் (Passport) அனுபவச்சான்றிதழ் ஆகியவற்றை ovemclmohsa2021@gmail.com என்ற இந்நிறுவனத்தின் மின்னஞ்சலுக்கு 18/04/2025 க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சிறப்பு தகுதி:- Saudi Professional Classification, HRD & Dataflow முடித்த செவிலியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜெண்ட்டுகளோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் நேரிடையாக பதிவு செய்து கொண்டு இந்நிறுவனத்தின் மூலம் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
படிப்பு மற்றும் பணிவிவரங்களின் தகுதியைப் பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும், இந்தப்பணிக்கு தேர்வுபெறும் பணியாளர்களிடமிருந்து சேவைக் கட்டணமாக ரூ.35,400/- மட்டும் வசூலிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மருத்துவர், செவிலியர் பணியிடங்களுக்கு 24-ம்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: பொது சுகாதாரத்துறை அறிவிப்பு
செவ்வாய் 18, மார்ச் 2025 11:57:16 AM (IST)

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
ஞாயிறு 16, மார்ச் 2025 8:37:35 PM (IST)

இந்திய வேளாண்மைத் துறையில் 55 காலியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு!
புதன் 19, பிப்ரவரி 2025 5:12:31 PM (IST)

ரயில்வேயில் 32,428 காலிப் பணியிடங்கள்: பிப்.22-க்குள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:18:25 PM (IST)

சவுதி அரசு மருத்துவமனைகளில் பணியிடங்கள்: பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்!
சனி 8, பிப்ரவரி 2025 11:03:53 AM (IST)

ரயில்வே பள்ளிகளில் 1036 பணியிடங்கள்: ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு!
சனி 18, ஜனவரி 2025 12:26:18 PM (IST)
