» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
தமிழக சுகாதார துறையில் 47 பிசியோதெரபிஸ்ட் பணியிடங்கள்!
செவ்வாய் 22, அக்டோபர் 2024 11:40:43 AM (IST)
தமிழக சுகாதார துறையில் 47 'பிசியோதெரபிஸ்ட்' பணியிடங்களுக்கு நவம்பர் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார துறையில் காலியிடங்களுக்கு தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 'பிசியோதெரபிஸ்ட்' கிரேடு 2 பிரிவில் 47 காலியிடங்கள் உள்ளன. அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலை., மற்றும் கல்லூரியில் தொடர்புடைய பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு பொது பிரிவினருக்கு அதிகபட்சம் வயது 32, மற்ற பிரிவுக்கு வயது உச்சவரம்பு இல்லை. தமிழ் தகுதி தேர்வு, ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் தேர்வு
நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை https://mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., எஸ்.டி.,பிரிவினருக்கு ரூ.500
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சவுதி அரேபிய மருத்துவமனைகளில் பணியிடங்கள் : பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 18, மார்ச் 2025 12:01:03 PM (IST)

மருத்துவர், செவிலியர் பணியிடங்களுக்கு 24-ம்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: பொது சுகாதாரத்துறை அறிவிப்பு
செவ்வாய் 18, மார்ச் 2025 11:57:16 AM (IST)

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
ஞாயிறு 16, மார்ச் 2025 8:37:35 PM (IST)

இந்திய வேளாண்மைத் துறையில் 55 காலியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு!
புதன் 19, பிப்ரவரி 2025 5:12:31 PM (IST)

ரயில்வேயில் 32,428 காலிப் பணியிடங்கள்: பிப்.22-க்குள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:18:25 PM (IST)

சவுதி அரசு மருத்துவமனைகளில் பணியிடங்கள்: பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்!
சனி 8, பிப்ரவரி 2025 11:03:53 AM (IST)
