» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வு : விண்ணப்பங்கள் வரவேற்பு!
சனி 19, அக்டோபர் 2024 12:54:44 PM (IST)
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 5- ஏ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 5- ஏ (தலைமை செயலக பணி) உதவிப் பிரிவு அலுவலர் / உதவியாளர் பதவிக்களுக்கான காலிப்பணியிடங்களைப் பணி மாறுதல் மூலம் நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அழைப்பு விடுத்துள்ளது.
இணைய வழி மூலம் தமிழ்நாடு அமைச்சுப் பணி / தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணியில் பணிபுரியும் தகுதி வாய்ந்த உதவியாளர் / இளநிலை உதவியாளர்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு இன்று முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நவம்பர் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்.
தேர்வு விபரங்களுக்கு https://apply.tnpscexams.in/apply-now?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணையதள முகவரியில் கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சவுதி அரேபிய மருத்துவமனைகளில் பணியிடங்கள் : பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 18, மார்ச் 2025 12:01:03 PM (IST)

மருத்துவர், செவிலியர் பணியிடங்களுக்கு 24-ம்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: பொது சுகாதாரத்துறை அறிவிப்பு
செவ்வாய் 18, மார்ச் 2025 11:57:16 AM (IST)

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
ஞாயிறு 16, மார்ச் 2025 8:37:35 PM (IST)

இந்திய வேளாண்மைத் துறையில் 55 காலியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு!
புதன் 19, பிப்ரவரி 2025 5:12:31 PM (IST)

ரயில்வேயில் 32,428 காலிப் பணியிடங்கள்: பிப்.22-க்குள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:18:25 PM (IST)

சவுதி அரசு மருத்துவமனைகளில் பணியிடங்கள்: பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்!
சனி 8, பிப்ரவரி 2025 11:03:53 AM (IST)
