» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
என்.டி.பி.சி., நிறுவனத்தில் 250 பணியிடங்கள்: விண்ணப்பிக்க கடைசி தேதி செப்.28!
வியாழன் 12, செப்டம்பர் 2024 12:23:57 PM (IST)
தேசிய அனல்மின் நிறுவனத்தில் (என்.டி.பி.சி.) எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நாட்டின் முன்னணி மின்சக்தி நிறுவனமான என்.டி.பி.சி.,யில் எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில் உள்ளிட்ட பிரிவுகளில் 250 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
துணை துணை மேலாளர் (எலக்ட்ரிக்கல் எரெக்ஷன்) - 45
துணை மேலாளர் (மெக்கானிக்கல் எரெக்ஷன்)- 95
C&I எரெக்ஷன்- 35
சிவில் கன்ஸ்ட்ரக்ஷன்- 75
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக் துறையில் பி. இ., பட்டம் பெற்றிருக்க வேண்டும். பத்தாண்டு முன் அனுபவம் தேவை.
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PwBD பிரிவினருக்கும் 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் ரூ. 300. எஸ்.சி., எஸ்.டி., மற்றும் பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
https://careers.ntpc.co.in/recruitment/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு முறை எழுத்து/கணினி அடிப்படையிலான தேர்வு, தனிப்பட்ட நேர்காணல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது. வரும் செப்டம்பர் 14ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 28.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அஞ்சல்துறை வங்கியில் 348 பணி இடங்கள்: அக்.29க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 23, அக்டோபர் 2025 4:09:02 PM (IST)

7,565 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள்: எஸ்.எஸ்.சி., அறிவிப்பு!
வியாழன் 25, செப்டம்பர் 2025 12:48:27 PM (IST)

தமிழக காவல்துறையில் 3665 பணி இடங்கள் : செப்.21 வரை விண்ணப்பிக்கலாம்..!
வெள்ளி 19, செப்டம்பர் 2025 12:55:39 PM (IST)

ரயில்வேயில் 434 காலி பணியிடங்கள்: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
புதன் 17, செப்டம்பர் 2025 12:27:25 PM (IST)

நீதிமன்ற அலுவலக உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
புதன் 13, ஆகஸ்ட் 2025 3:34:18 PM (IST)

தமிழக அரசு துறைகளில் 645 இடங்கள்: ஆக.13வரை விண்ணப்பிக்கலாம்!
சனி 9, ஆகஸ்ட் 2025 4:02:04 PM (IST)


