» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

விண்வெளி மையத்தில் ஆப்ரேட்டர் வேலை: ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

வெள்ளி 16, ஆகஸ்ட் 2024 12:39:49 PM (IST)

நைனி ஏரோஸ்பேஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கு ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டின் துணை நிறுவனம் நைனி ஏரோஸ்பேஸ் லிமிடெட் நிறுவனம், விமானம், ஹெலிகாப்டர் லூம் (கம்பி ஹார்னஸ்), ஸ்டப் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள 25 ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து வரும் 26 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Operater SS

1. Fitter - 15

2. Electrician - 10

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30.6.2024 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணியிடம்: ஆக. 12-இல் 2-ஆம் தாள் 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.nael.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 26.8.2024


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory