» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
பொதுத்துறை வங்கிகளில் 665 எழுத்தர் பணி இடங்கள் : 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!
புதன் 3, ஜூலை 2024 11:30:46 AM (IST)
தமிழகத்தில் 6 பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 665 எழுத்தர் பணியிடங்களுக்கு ஜூலை 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பேங்க் ஆப் இந்தியா உள்பட 6 வங்கிகளில் மொத்தம் 665 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதில் பொது பிரிவினருக்கு 285 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 57 இடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 177 இடங்களும், பழங்குடியினருக்கு 3 இடங்களும், பட்டியலின பிரிவினருக்கு 143 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
1996 ஜூலை 2ம் தேதிக்கு பிறகு பிறந்தவர்களும் 2004 ஜூலை 1ம் தேதிக்கு முன் பிறந்தவர்கள் மட்டுமே இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு கட்டணமாக பழங்குடியின. பட்டியலின பிரிவினருக்கு ₹175ம், மற்ற வர்களுக்கு ₹850ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளுக்கு https://www.ibps.in/ என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஜூலை 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணத்தையும் ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும் என வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் அறிவித்துள்ளது.
ArthiJul 6, 2024 - 08:14:47 AM | Posted IP 172.7*****