» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

குழந்தைகள் நலத்துறையில் ரூ.18,000 சம்பளத்தில் வேலை!

திங்கள் 24, ஜூன் 2024 5:35:17 PM (IST)

விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நலத்துறையில் தகவல் பகுப்பாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் விருதுநகர் மாவட்ட குழந்தைகள்அ பாதுகாப்புப் பிரிவின் தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள தகவல் பகுப்பாளர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் புள்ளியியல், கணிதம், பொருளாதாரம், கணினி அறிவியல்(பிசிஏ) போன்ற ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி சார்ந்த பணிகளில் முன்அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 42 வயதிற்குட்டவர்களாக இருக்க வேண்டும். பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.18,536 வழங்கப்படும்.

விண்ணப்பிக்க விரும்புவோர் www.virudhunagar.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்கள், சமீபத்திய புகைப்படத்துடன் வரும் 28 ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2/830-5 - வ.உ.சி.நகர், சூலக்கரைமேடு, விருதுநகர்-626 003. தொலைபேசி எண்.04562-293946 என்ற அஞ்சல் முகவரிக்கும் அனுப்பப்பட வேண்டும்.


மக்கள் கருத்து

AkshaJun 29, 2024 - 01:33:35 PM | Posted IP 162.1*****

No

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory