» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.60ஆயிரம் சம்பளத்தில் ஓட்டுநர் வேலை!

வெள்ளி 31, மே 2024 12:42:21 PM (IST)

இந்தியாவின் முன்னணி மல்டி-டெக்னாலஜி நிறுவனமான பிஇஎம்எல் நிறுவனத்தில் கார் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்தியாவின் முன்னணி மல்டி-டெக்னாலஜி நிறுவனமான பிஇஎம்எல் லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள கார் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.KP/S/05/2024

பணி: Staff Driver

காலியிடங்கள்: 4

சம்பளம்: மாதம் ரூ.16,900 - 60,650 வழங்கப்படும்.

தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: இலகுரக,கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் மோட்டாரில் ஏற்படும் திடீரென ஏற்படும் பழுதுகளை சரிசெய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை BEML Limited, Bangalore என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.bemlindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழே நகல்களிலும் சுய சான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Sr.Manager(Corporate Recruitment), Recruitment Cell, BEML Soudha, No:23/1. 4th main Road, S.R.Nagar, Bangalore-560 027

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்துசேர கடைசி நாள்: 5.6.2024

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளவும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory