» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு தகுதிக்கு ரூ.63,200 சம்பளத்தில் வேலை!

வெள்ளி 26, ஏப்ரல் 2024 11:00:52 AM (IST)

அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10ம் வகுப்பு முடித்து டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்...

மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தபால் துறை செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புடன் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான் தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பின் முக்கிய விபரம் வருமாறு:

காலியிடங்கள்: தபால் துறையில் தற்போது ஸ்டாப் கார் டிரைவர் (Staff Car Driver) பணிக்கு 27 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் கர்நாடகாவில் பணியமர்த்தப்படுவார்கள். அதன்படி பெங்களூரில் 15 பேர், மைசூரில் 3 பேர் பணியமர்த்தப்படுவார்கள். மற்றவர்கள் சிக்கோடு, கலபுரி, ஹாவேரி, கார்வார், மண்டியா, புத்தூர், சிவமொக்கா, உடுப்பி, கோலார் உள்ளிட்ட இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.

வயது வரம்பு: விண்ணப்பம் செய்வோர் 18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும் தளர்வு வழங்கப்படும். மேலும் மற்றவர்களுக்கும் அரசு விதிகளின்படி வயது தளர்வு என்பது வழங்கப்படும்.

கல்வி தகுதி: இந்த பணியை பெற விரும்புவோர் 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் லைட் மற்றும் ஹெவி லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். டிரைவிங்கில் 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அதோடு மோட்டார் வாகனம் பற்றிய புரிதலை கொண்டிருக்க வேண்டும். மேலும் ஹோம்ஹார்ட் மற்றும் சிவில் வாலண்டியர்ஸ்ஸாக 3 ஆண்டு பணியாற்றியவர்கள் என்றால் இன்னும் சிறப்பு என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மாத சம்பளம்: இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.19,900 முதல் அதிகபட்சமாக ரூ.63,200 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. இதுதவிர ஏற்கக்கூடிய வகையிலான அலோவன்ஸ் தொகையும் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.inidapost.gov.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து ‛‛The Manager, Mail Motor Service, Bengaluru - 560 001 என்ற முகவரிக்கு ஸ்பீட் போஸ்ட் அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட் மூலம் மே மாதம் 15ம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும் படி அனுப்பி வைக்க வேண்டும்.

இப்படி அனுப்பும்போது அந்த விண்ணப்பம் வைக்கப்பட்டுள்ள கவரின் மேல்புறத்தில் ‛‛Applicaton for the post of Staff Car Driver (Direct Recruitment) at MMS Bengaluru'' என கட்டாயம் குறிப்பிட வேண்டும். ஸ்பீட் போஸ்ட், ரிஜிஸ்டர் போஸ்ட் தவிர பிற வகைகளில் அனுப்பப்படும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

Dinesh Babu BJJun 13, 2024 - 10:01:40 PM | Posted IP 172.7*****

How to apply for this job

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory