» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
தமிழ்நாட்டில் 4000 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்கள்: ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு
வியாழன் 14, மார்ச் 2024 5:37:34 PM (IST)
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை - அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்களை போட்டித் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசு தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. மார்ச் 28 முதல் ஏப்ரல் 29 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஆகஸ்ட் 4-ஆம் நாள் போட்டித் தேர்வுகள் நடைபெறவுள்ளன. 4,000 பேருக்கு அரசு வேலை வழங்குவதற்கான ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை ஆசிரியர் பணிக்காக காத்திருப்போரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் மொத்தமுள்ள 10,079 ஆசிரியர் பணியிடங்களில் சுமார் 7500 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவை கடந்த 11 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்து வந்த நிலையில், 2,331 நிரந்தர உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை 2019 இல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
ஆனால் நீதிமன்ற வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேர்வுப் பணியை முடிக்க இயலவில்லை. இதையடுத்து முதல்வர் தலைமையில் உயர்நிலைக் குழுக் கூட்டப்பட்டு, தகுதி, கற்பித்தல் அனுபவம் மற்றும் நேர்முகத்தேர்வுக்குச் சிறப்பு மதிப்பெண்கள் வழங்கும் நடைமுறையைக் கைவிட்டு, அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாகப் பணிபுரியப் போட்டி எழுத்துத் தேர்வுக்கு 200 மதிப்பெண்கள், நேர்முகத்தேர்வுக்கு 300 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் தேர்வு முறை முடிவு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த முறையினால் சுதந்திரமான நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்வு உறுதி செய்யும். ஆனால் 2019 ஆண்டு முதல் உதவி பேராசிரியர் பணியிடங்கள் தேர்வுச் செய்யப்படவில்லை. அதன் பிறகு அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. அவர்களின் விண்ணப்பம் இந்த தேர்வுக்கும் பரிசீலிக்கப்படும். புதியதாக 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு, எழுத்துத் தேர்வு பாடங்களுக்கான பாடத்திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது என உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது அப்போதைய உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், 4,000 பேருக்கு அரசு வேலை வழங்குவதற்கான ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை ஆசிரியர் பணிக்காக காத்திருப்போரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அறிவிப்பு எண். 02/2024
பணி: உதவிப் பேராசிரியர்(ASSISTANT PROFESSORS)
காலியிடங்கள்: 4,000
சம்பளம்: மாதம் ரூ.57,700 - 1,82,400
4000 உதவிப் பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
இடைநிலை ஆசிரியா் பணியிடங்கள்: விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய அவகாசம் நீட்டிப்பு
பாடப்பிரிவுகள் வாரியான காலியிடங்கள்:
1. உயிர்வேதியியல் - 24
2. உயிரியல் அறிவியல் கல்வி - 1
3. தாவரவியல் - 115
4. தாவர உயிரியல் மற்றும் தாவர உயிரி தொழில்நுட்பம் - 28
5. பயோ டெக்னாலஜி - 5
6. வணிக நிர்வாகம் -20
7. கணினி அறிவியல் - 244
8. கணினி விண்ணப்பம் - 76
9. வேதியியல் - 263
10. வணிகம் - 296
11. வர்த்தகம் (கணக்குகள் & நிதி) - 2
12. வர்த்தகம் (வங்கி மற்றும் காப்பீடு) - 1
13. வர்த்தகம் (கணினி விண்ணப்பம்) - 14
14. வணிகம் (இ-காமர்ஸ்) - 1
15. வர்த்தகம் (சர்வதேச வணிகம்)- 21
16. வணிகம் (கூட்டுறவு) - 14
17. வர்த்தகம் (பெருநிறுவன செயலாளர் பதவி) - 30
18. உடை வடிவமைப்பு மற்றும் பேஷன் - 5
19. பாதுகாப்பு ஆய்வுகள் - 8
20. ஆங்கிலம் - 656
21. பொருளாதாரம் - 161
22. கல்வியியல் - 45
23. எலக்ட்ரானிக்ஸ் - 21
24. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொடர்புபியல் - 9
25. சுற்றுச்சூழல் அறிவியல் - 1
26. ஃபேஷன் டெக்னாலஜி - 1
27. உணவு சேவை மேலாண்மை மற்றும் உணவுமுறை - 7
28. உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து - 4
29. உணவு மற்றும் ஊட்டச்சத்து - 10
30. நிலவியல் - 78
31. புவியியல் - 32
32. வரலாறு - 126
33. வரலாற்று ஆய்வுகள் - 4
34. வரலாற்று கல்வி - 1
35. ஹோம் சயின்ஸ் - 36
36. மனிதவள மேலாண்மை - 36
37. மனித உரிமைகள் - 3
38. ஹிந்தி - 5
39. தகவல் தொழில்நுட்பம் - 12
40. இந்திய கலாசாரம் மற்றும் சுற்றுலா - 4
41. இந்திய இசை - 3
42. இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் - 7
43. கணிதம் - 318
44. நுண்ணுயிரியல் - 32
45. கடல்சார் உயிரியல் - 2
46. கணிதம் கல்வியியல் - 4
47. மலையாளம் - 1
48. ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை - 26
49. அரசியல் அறிவியல் - 37
50. இயற்பியல் - 226
51. உடற்கல்வி - 1
52. உடற்கல்வி அறிவியல் கல்வி - 4
53. பொது நிர்வாகம் - 9
54. உளவியல் - 14
55. புள்ளியியல் - 80
56. சமூகவியல் - 3
57. சமூகப் பணி - 16
58. சமஸ்கிருதம் - 4
59. சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை - 12
60. தமிழ் - 569
61. தெலுங்கு - 2
62. உருது - 3
63. விஷுவல் கம்யூனிகேஷன் - 29
64. வனவிலங்கு உயிரியல் - 5
65. விலங்கியல் - 132
வயதுவரம்பு: 1.7.2024 தேதியின்படி 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: குறைந்தபட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் அல்லது இந்தியப் பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட, தொடர்புடைய பாடங்களில் முதுகலை பட்டம் பெற்றிருப்பதுடன் யுஜிசி அல்லது சிஎஸ்ஐஆர் -ஆல் நடத்தப்படும் தேசிய தகுதித் தேர்வு (நெட்) அல்லது அதுபோன்ற ஸ்லெட், செட் போன்ற ஏதாவதொரு தேர்வில் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும் அல்லது எம்.பில், பி.எச்டி முடித்திருக்க வேண்டும். விரிவான விவரங்களை அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.trb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் அதனை சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். அனைத்து விவரங்களும் மேற்கண்ட இணையதளத்தில் வெளியிடப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 4.8.2024
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 29.4.2024
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சவுதி அரேபிய மருத்துவமனைகளில் பணியிடங்கள் : பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 18, மார்ச் 2025 12:01:03 PM (IST)

மருத்துவர், செவிலியர் பணியிடங்களுக்கு 24-ம்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: பொது சுகாதாரத்துறை அறிவிப்பு
செவ்வாய் 18, மார்ச் 2025 11:57:16 AM (IST)

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
ஞாயிறு 16, மார்ச் 2025 8:37:35 PM (IST)

இந்திய வேளாண்மைத் துறையில் 55 காலியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு!
புதன் 19, பிப்ரவரி 2025 5:12:31 PM (IST)

ரயில்வேயில் 32,428 காலிப் பணியிடங்கள்: பிப்.22-க்குள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:18:25 PM (IST)

சவுதி அரசு மருத்துவமனைகளில் பணியிடங்கள்: பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்!
சனி 8, பிப்ரவரி 2025 11:03:53 AM (IST)
