» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம், குடிநீர் வாரியத்தில் வேலை : கடைசி நாள் மார்ச் 12!!
ஞாயிறு 10, மார்ச் 2024 12:59:48 PM (IST)
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வாரியத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரிகளிடம் இருந்து வரும் 12 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண்.01/DMA/Recruitment/2024
பணி: Assistant Engineer(Corporation)
காலியிடங்கள்: 146
பணி: Assistant Engineer(Civil/Mechanical)
காலியிடங்கள்: 145
பணி: Assistant Engineer(Municipality)
காலியிடங்கள்: 80
பணி: Assistant Engineer(Civil)
காலியிடங்கள்: 58
பணி: Assistant Engineer(Mechanical)
காலியிடங்கள்: 14
பணி: Assistant Engineer(Electrical)
காலியிடங்கள்: 71
தகுதி: பொறியியல் துறையில், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: Assistant Engineer (Planning)(Corporation)
காலியிடங்கள்: 156
தகுதி: பொறியியல் துறையில், பி.ஆர்க் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,38,500
பணி: Town Planning Officer Grade II/Assistant Engineer(Planning)(Municipality)
காலியிடங்கள்: 12
தகுதி: பொறியியல் துறையில் Planning,Civil, கட்டடக்கலை Architecture போன்ற பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ.35,900-1,31,500
பணி: Junior Engineer
காலியிடங்கள்: 24
தகுதி: பொறியியல் துறையில் Civil,Sanitary பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Technical Assistant
காலியிடங்கள்: 257
தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம், குடிநீர் வாரியத்தில் வேலை : விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பித்துவிட்டீர்களா..? மத்திய அரசின் உரங்கள், கெமிக்கல் நிறுவனத்தில் வேலை!
பணி: Draughtaman(Municipality)
காலியிடங்கள்: 130
தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: OVerseer
காலியிடங்கள்: 92
தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Town Planning Inspector/Junior Engineer(Planning)
காலியிடங்கள்: 102
தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கட்டடக்கலை பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,400 -1,30,400
பணி: Work Inspector
காலியிடங்கள்: 367
சம்பளம்: மாதம் ரூ.18,200-67,100
தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Sanitary Inspector(Corporation & Municipality)
காலியிடங்கள்: 244
தகுதி: வேதியியல், விலங்கியல் பாடப்பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பொதுசுகாதாரம், சுற்றுச்சூழல் அறிவியல், நுண்ணுயிரியல், உயிர்வேதியியல் பாடப்பிரிவுகளில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட கல்வித்தகுதியுடன் தமிழக அரசு அங்கீகாரம் பெற்ற Sanitary Inspector படிப்பை முத்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,30,400
வயதுவரம்பு: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் 1.7.2024 தேதியின்படி பொதுப்பிரிவினர் 32 வயதிற்குள்ளும், இதர பிரிவினர் மற்றும் ஆதரவற்ற விதவைகள் பிரிவைச் சேர்ந்த பிரிவினருக்கு உச்சபட்ச வயதுவரம்பு கிடையாது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வானது தமிழ்மொழித் திறன், பொது ஆங்கிலம் மற்றும் சம்மந்தப்பட்ட பணிக்குரிய முக்கிய பாடப்பிரிவிருந்து கேள்விகள் கேட்கப்படும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 29.6.2024 மற்றும் 30.6.2014 நடைபெறும். ஒவ்வொரு மாவட்டதின் தலைநகரங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: https://tnmaws.ucanapply.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 12.3.2024
TvigneshpandianApr 26, 2024 - 10:21:53 PM | Posted IP 172.7*****