» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு : நேர்முகத் தேர்வு தேதி அறிவிப்பு!

வியாழன் 7, டிசம்பர் 2023 5:30:15 PM (IST)

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் கீழ் சென்னை, மதுரை, திருச்சி, கோவை சர்வதேச விமான நிலையங்களில் காலியாக உள்ள துணை மேலாளர், பணி அலுவலர், இளநிலை அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த பதவிகளுக்கு வரும் 26, 27, 29 மற்றும் ஆகிய நாள்களில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்ட உள்ளது. தகுதியான இருபாலரும் நேரடியாக நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் மற்றும் ஆங்கிலம், ஹிந்தியில் எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களும் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 28, 50, 55 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுவோருக்கு பதவியின் அடிப்படையில் சம்பளமாக மாதம் ரூ.17,850 முதல் 45,000 வழங்கப்படும். முழுமையான விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பதவி வாரியாக நேர்முகத் தேர்வு நடைபெறும் நேர்முகத் தேர்வு நாள் மற்றும் நேரம் குறித்த விவரம்:

பதவி: Duty Manager - Passenger - 8

நேர்முகத் தேர்வு நாள் மற்றும் நேரம்: சென்னைக்கு 26.12.2023 காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை நடைபெறும். 

பதவி: Duty Officer - Passenger - 8

நேர்முகத் தேர்வு நாள் மற்றும் நேரம்: சென்னைக்கு 27.12.2023 காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை நடைபெறும். 

பதவி: Customer Service Executive, Jr.Customer Service Executive (Chennai 43, Madurai 15, Trichy 10, Coimbatore 12)

நேர்முகத் தேர்வு நாள் மற்றும் நேரம்: சென்னைக்கு 27.12.2023 காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை நடைபெறும். மதுரை, திருச்சி, கோவைக்கு 29.12.2023 காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை நடைபெறும். 

பதவி: Utility Agent Cum Ramp Driver - 2

பதவி: Handyman (Madurai 20, Trichy 10, Coimbatore 20)

நேர்முகத் தேர்வு நாள் மற்றும் நேரம்: 30.12.2023 அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை நடைபெறும்.

தேர்வு நடைபெறும் இடம்: Office Of the HRD Department, AI Unity Complex, Pallavaram Contonment, Chennai-600 043, Land Mark: near Taj Catering.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory