» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் 496 இடங்கள்: நவ.30 கடைசி நாள்
செவ்வாய் 28, நவம்பர் 2023 5:35:59 PM (IST)
இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் காலியாக உள்ள 496 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் காலியாக உள்ள 496 இடங்களுக்கு பிஎஸ்சி., பி.இ., படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Executive (Air Traffic Control): 496 இடங்கள் (பொது-199, பொருளாதார பிற்பட்டோர்- 49, ஒபிசி- 140, எஸ்சி-75, எஸ்டி-33). சம்பளம்: ₹40,000- 1,40,000.
வயது: 30.11.2023 தேதியின்படி 27 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 10 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: இயற்பியல் மற்றும் கணித பாடப்பிரிவை முக்கிய பாடமாகக் கொண்டு பிஎஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு பொறியியல் பாடப்பிரிவில் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தால் ஆன்லைனில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, மொழித் திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ தகுதித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோர் பிரிவினருக்கு கட்டணம் ₹1000/-. இதை ஆன்லைனில் செலுத்தவும். எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.
www.aai.aero என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.11.2023.