» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

தமிழகத்தில் 2,222 பட்டதாரி ஆசிரியர்கள் பணி இடங்களுக்கான தேர்வு அறிவிப்பு!

புதன் 25, அக்டோபர் 2023 3:42:25 PM (IST)

தமிழகத்தில் 2,222 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வள மைய கருத்தாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு 2024 ஜனவரி 7 -ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 23 வட்டார வள மைய கருத்தாளர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான போட்டித் தேர்வு அறிவிப்பை புதன்கிழமை தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.  இந்த பணிகளுக்கு சம்பளமாக மாதம் ரூ.36,400 முதல் 1,15,700 வரை வழங்கப்படும்.

அதன்படி,  தமிழ் - 394, ஆங்கிலம் - 252, கணிதம் - 233, மற்றும் இயற்பியல் - 293, வேதியியல் - 290, தாவரவியல் - 131, விலங்கியல் - 132, வரலாறு - 391, புவியியல் - 106 என மொத்தம் 2,222 காலிப்பணியிடங்கள் போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள பாடப்பிரிவுகளில் இளநிலைப் பட்டம் மற்றும் பி.எட் முடித்திருப்பதுடன் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -II -இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தகுதியானோர் https://www.trb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ ஆசிரியர் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் நவம்பர் 1 -ஆம் தேதி முதல் 30 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு வரும் 2024 ஜனவரி 7 -ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பின் மூலம் அரசாணை 149 ரத்து இல்லை என்பது உறுதியாகி உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory