» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை!

திங்கள் 7, ஆகஸ்ட் 2023 4:32:40 PM (IST)



சென்னையில் செயல்பட்டு வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் டெக்னிசியன், கிளார்க், பொறியாளர் உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கு தகுதியானவர்கள் ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

பணி: Engineering Assistant(Trainee)
காலியிடங்கள்: 6
சம்பளம்: மாதம் ரூ.24,500 - 90,000
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Technician "C"
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.21,500 - 82,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து ஒரு ஆண்டு தொழில் பழகுநர் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

பணி: Clerk-cum-Computer Operator "C"
காலியிடங்கள்: 5
சம்பளம்: மாதம் ரூ.21,500 - 82,000
தகுதி: பி.காம், பிபிஎம் படிப்புடன் கணினியில் பணிபுரிய தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: அனைத்து பணிகளுக்கும் 1.7.2023 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு,செய்முறை தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை எஸ்பிஐ செல்லானை பயன்படுத்தி ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 8.8.2023


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory