» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
தமிழக தபால் துறையில் 2,994 பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு
சனி 5, ஆகஸ்ட் 2023 4:45:39 PM (IST)
தமிழ்நாடு தபால் துறையில் காலியாக உள்ள 2,994 பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய தகவல் தொலைதொடர்புத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தபால் துறையின் தமிழ்நாடு தபால் துறையில் காலியாக உள்ள 2,994 உதவி பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டர், உதவி பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டர்,கிராமின் தக் சேவக்(ஜிடிஎஸ்) பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு இன்றி மதிப்பெண் அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளனர். இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Gramin Dak Sevak (GDS), BRANCH POSTMASTER (BPM)
பணி: Assistant Branch Postmaster (ABPM)/Dak Sevaks)
காலியிடங்கள்: 2,994
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும், கணினி குறித்த அறிவு பெற்றிருப்பவராகவும், சைக்கிள் ஓட்டத்தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்.
சம்பளம்: பிபிஎம் பணிக்கு மாதம் ரூ.12,000 - 29,380, ஏபிபிஎம் பணிக்கு மாதம் ரூ.10,000 - 24,470
வயதுவரம்பு: 23.8.2023 தேதியின்படி18 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு சான்றிதழ்கள் சரிபார்ப்பு செய்யப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு இல்லை.
விண்ணப்பிக்கும் முறை: https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.8.2023