» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 14ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - ஆட்சியர் தகவல்!
திங்கள் 10, ஜூலை 2023 5:30:17 PM (IST)
தூத்துக்குடி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வருகிற 14ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இத்தனியார்துறை 20 வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, டிரைவர் மற்றும் கணிணி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம். மேற்கண்ட தகுதியுள்ள, தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களது பயோடேட்டா மற்றும் கல்வி சான்றுகளுடன், தூத்துக்குடி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் செய்யப்படும் நேர்வில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது. தனியார் நிறுவனத்தினர் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய இம்முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் தொடர்புக்கு 0461-2340159 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொதுத்துறை வங்கிகளில் 1,007 பணியிடங்கள்: ஜூலை 21க்குள் விண்ணப்பிக்கலாம்!
சனி 5, ஜூலை 2025 12:05:50 PM (IST)

மத்திய அரசு துறைகளில் 3,134 காலி பணியிடங்கள்: எஸ்.எஸ்.சி அறிவிப்பு
புதன் 25, ஜூன் 2025 10:36:10 AM (IST)

மீன்வளத் துறையில் பணியிடங்கள் : ஆட்சியர் தகவல்
சனி 21, ஜூன் 2025 7:36:44 PM (IST)

ஆவினில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு நேரடி நியமன தேர்வு
திங்கள் 16, ஜூன் 2025 4:56:01 PM (IST)

மத்திய அரசு துறைகளில் 14,582 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
வியாழன் 12, ஜூன் 2025 4:47:07 PM (IST)

விமானப் படையில் 153 பணியிடங்கள் : ஜூன் 15 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு
திங்கள் 2, ஜூன் 2025 5:22:18 PM (IST)
