» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்ட வள வல்லுநர் பதவிக்கான அறிவிப்பு
சனி 31, டிசம்பர் 2022 11:43:42 AM (IST)
தூத்துக்குடி மாவட்ட வள வல்லுநர் (பண்ணை சார் தொழில்) காலிப்பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள மாவட்ட வள வல்லுநர் (பண்ணை சார் தொழில்) பணியிடங்களை ஒப்பந்த முறையில் பூர்த்தி செய்யும் / நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 10.01.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாவட்ட வள வல்லுநர் (பண்ணை சார் தொழில்) பதவி : 1
மாவட்ட வள வல்லுநர் (பண்ணை சார் தொழில்) பதவிக்கு மதிப்பூதியம்
1. முன் அனுபவ அடிப்படையில் 10 வருடங்கள் அல்லது அதற்கு மேல் இருந்தால் நாளொன்றுக்கு ரூ.3500 வழங்கப்படும்
2. 6 வருடம் முதல் 8 வருடம் வரை நாளொன்று 2500 வழங்கப்படும்
3. 2 வருடம் முதல் 6 வருடம் வரை நாளொன்றுக்கு 2000 மதிப்பூதியம் வழங்கப்படும்
24 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். இளங்கலை பட்டப்படிப்பு ( Agriculture/ Veterinary Science/ Horticulture). முதுகலை பட்டப்படிப்பு (Business Administration in supply Chain Management is Preferable) முடித்திருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் குறைந்த பட்சம் 2 வருடங்கள் முதல் அதிகபட்சம் 10 வருடங்கள் வரை பணிபுரிந்து இருக்க வேண்டும்.
Communication Ability
The incumbent should have good oral and written Communication ability in Tamil as the primary work is in the rural areas. Working knowledge in English a must as official communication on schemes from GOI are in English
Soft Skills: Should have adequate knowledge in computer operation
வழிமுறைகள் :
1. விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, சாதிச்சான்று, கணினி பயிற்சி பெற்றதற்கான சான்று மற்றும் முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
2. விண்ணப்ப படிவத்தில் உள்ள விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
3. தகுதியில்லாத மற்றும் காலங்கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
4. எந்த ஒரு விண்ணப்பதையும் நிராகரிக்கும் உரிமை அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.
5. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர் தேர்ந்தெடுக்கப்படுவர்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் இணை இயக்குநர்/ திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் 5.45 வரை நேரிலோ அல்லது இணை இயக்குநர் / திட்ட இயக்குநர், தமிழ்நாடு ஊரக வாழ்வாதர இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், இரண்டாவது தளம், கோரம்பள்ளம் - 628101, தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ 10.01.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
மாவட்ட வள வல்லுநர் (பண்ணை சார் தொழில்) காலிப்பணியிடத்திற்கான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் இணை இயக்குநர் / திட்ட இயக்குநர், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கான WWW.thoothukudi.nic.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.