» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

நெல்லையில் டிச.26ல் ஜெயிலர் பதவிகளுக்கான தேர்வு: 3 மையங்களில் நடைபெறுகிறது!

வெள்ளி 23, டிசம்பர் 2022 5:11:32 PM (IST)

திருநெல்வேலியில் 3 தேர்வு மையங்களில் ஜெயிலர் பதவிகளுக்கான இணைய வழித் தேர்வு வருகிற 26ம் தேதி நடைபெறவுள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் திருநெல்வேலி மாவட்டத்தில் 03 வைத்து ஜெயிலர் (ஆண்கள்) ஜெயிலர் (பெண்களுக்கான சிறப்பு சிறைச்சாலை) பதவிகளுக்கான இணைய வழித் தேர்வு 26.12.2022 அன்று முற்பகல் மற்றும் பிற்பகல் நடத்தப்படவுள்ளது. 

மேற்படி தேர்வினை 1500 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர். தேர்வானது திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ள PSN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, PSN பொறியியல் கல்லூரி, PSN இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் PSN நகர் ஆகிய 3 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறவுள்ளது. மேற்படி தேர்வு நாளன்று தடைபடாத மின்சாரம் வழங்கவும், பேருந்துகளை தேர்வு மையங்களுக்கு கூடுதலாக இயக்குமாறும் தேர்வு நாளன்று தடைபடாத இணையதள வசதியினை ஏற்படுத்தி கொடுக்குமாறும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

தேர்வு நடைபெறும் கல்வி நிலையத்திற்கு காவல்துறை மூலம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திட உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் மையங்களுக்கு அருகாமையில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவ குழுக்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் வசதிகளை தயார் நிலையில் வைத்திட சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதுவோர் தங்களின் தேர்வு மையங்களை கண்டறிந்து முன்கூட்டியே தேர்வு எழுத வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், தேர்வு அறையினுள் செல்போன்களை எடுத்துச் செல்லக் கூடாது.தேர்வு எமுதுபவர்கள் தவிர இதர நபர்கள் தேர்வு மைய வளாகத்திற்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory