» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு : விண்ணப்பங்கள் வரவேற்பு
திங்கள் 3, அக்டோபர் 2022 5:02:43 PM (IST)
சென்னையில் உள்ள தபால் துறை அலுவலக மெயில் மோட்டார் சர்வீஸ் பிரிவில் காலியாக உள்ள Skilled Artisans பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண். MSE/B9-4/XI/2022
பணி: Skilled Artisans
பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:
1. M.V.Mechanic - 2
2. M.V.Electrician - 1
3. Painter - 1
4. Tyreman - 1
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
வயதுவரம்பு: 1.7.2021 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பணி சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் எம்.வி.எம் பிரிவுக்கு விண்ணப்பிப்போர் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட டிரேடில் 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு குறித்த விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.
கட்டணம் விவரம்: விண்ணப்பக் கட்டணம் ரூ.100, தேர்வுக் கட்டணம் ரூ.400. இதனை இந்தியன் போஸ்டல் ஆர்டராக(ஐபிஓ) எடுக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.indianpost.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுயசான்று செய்து அதனை விரைவு, பதிவு தபாலில் கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Senior Manager(JAG)
Mail Motor Service,
No.37, Greams Road, Chennai - 600 006.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 19.10.2022