» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
தமிழக அரசுத் துறையில் பல்வேறு பணியிடங்கள்: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்தவர்களுக்கு வாய்ப்பு
சனி 13, ஆகஸ்ட் 2022 10:44:41 AM (IST)
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ளது.
இதற்கு இந்து மதத்தை சார்ந்த தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் காலியிடங்கள் விவரம் வருமாறு :
பணி: தாளம் - 01
சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600
பணி: வேத பாராயணம் - 02
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
பணி: உப கோயில் ஓதுவார் - 01
சம்பளம்: மாதம் ரூ.12,600 - 39,900
தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட இசைப் பள்ளிகளில் இருந்து மூன்றாண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.
பணி: உதவி பரிசாரகர் - 04
சம்பளம்: மாதம் ரூ.10,000 - 31,500
தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருப்பதுடன், கோயில்களில் நெய்வேத்யம் மற்றும் பிரசாதம் தயாரிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
பணி: உதவி யானைப்பாகம் - 01
சம்பளம்: மாதம் ரூ.11,600 - 36,800
தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். யானைக்கு பயிற்சி அளித்து வழி நடத்தும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: கருணை இல்லக் காப்பாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400
பணி: கால்நடை பராமரிப்புத் தொழிலாளர் - 02
சம்பளம்: மாதம் ரூ.10,000 - 31,500
தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பணி: தொழில்நுட்ப உதவியாளர்(சிவில்) - 01
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500
தகுதி: பொறியியல் துறையில் கட்டட பொறியியலில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
பணி: ஜெனரேட்டர் ஆப்ரேட்டர் - 01
சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52,400
தகுதி: மின் கம்பிப் பணியாளர்கள் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் மற்றும் இந்திரத்துறையில் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: பிளம்பர் - 01
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900
தகுதி: பிளம்பிங் பிரிவில் தொழிற்பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் மற்றும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: சமையல்காரர் - 01
சம்பளம்: மாதம் ரூ.13,200 - 41,800
பணி: உதவி சமையல்காரர் - 01
சம்பளம்: மாதம் ரூ.11,600 - 36,800
அனுபவம்: 50 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு உணவு தயாரிப்பதில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: தூய்மைப் பணியாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.10,000 - 31,500
தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2022 அன்று 18 வயது நிறைவடைந்தவராகவும், 35 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் ரூ.100 செலுத்தி விண்ணப்பப் படிவத்தைப் பெற்று அதைப் பூர்த்திச் செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 18.08.2022
மேலும் விவரங்கள் அறிய www.tnhrce.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
AvniMar 21, 2023 - 06:48:03 AM | Posted IP 162.1*****