» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
குரூப் 1 தேர்வுக்கான இலவச பயிற்சி: ஆட்சியர் துவக்கி வைத்தார்
செவ்வாய் 17, ஆகஸ்ட் 2021 3:48:32 PM (IST)
திருச்செந்தூரில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கே.டி.எம் மஹாலில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில் டி.என்.பி.எஸ்.சி. தொகுதி 1 போட்டித் தேர்வுக்கு பயிலும் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் துவக்கி வைத்தார்கள். நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் கோகிலா, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு அலுவலர் பேச்சியம்மாள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரம்யா திருச்செந்தூர் வட்டாட்சியர் முருகேசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.