» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!
செவ்வாய் 20, ஜூலை 2021 5:50:34 PM (IST)
தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் Young Professional-II பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ள தகவல்களினை ஆராய்ந்து விட்டு அதன் படி விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
பல்கலைக்கழக பணியிடங்கள் :
மேற்கூறப்பட்ட Young Professional-II பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
TANUVAS கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் B.V.Sc & AH தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
Young Professional-II தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 28.07.2021 அன்று நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 28.07.2021 அன்று கீழ்காணும் முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முகவரி – Post Graduate Research Institute in Animal Sciences, Kattupakkam, Kancheepuram-603203