» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

டி.என்.பி.எஸ்.சி. செயலாளராக உமா மகேஸ்வரி நியமனம்

வியாழன் 17, ஜூன் 2021 11:09:16 AM (IST)

டி.என்.பி.எஸ்.சி. செயலாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 2 பேர் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக சுதனும், செயலாளராக நந்தகுமாரும் இருந்தனர். புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 13-ந்தேதி 54 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதில், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த சுதனும் மாற்றப்பட்டார். 

அதேபோல் செயலாளராக இருந்த நந்தகுமார், ஏற்கனவே மாற்றம் செய்யப்பட்டு, தற்போது அவர் பள்ளிக்கல்வி ஆணையராக உள்ளார். இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி. செயலாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 2 பேர் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர். இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக கிரண் குராலாவும், செயலாளராக பி.உமா மகேஸ்வரியும் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory