» சினிமா » செய்திகள்
சின்னத்திரை உலகில் பெரும் சோகம்: இளம் நடிகை சஞ்சிதா தற்கொலை!
செவ்வாய் 16, ஜூன் 2026 4:35:12 PM (IST)
பிரபல இந்தித் தொலைக்காட்சித் தொடர் நடிகையான சஞ்சிதா உகாலே (22) மும்பையில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட் சின்னத்திரை உலகில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பான ‘கும்கும் பாக்யா’, ‘தில்வாலி துல்ஹா லே ஜாயேகி’ மற்றும் ‘க்ரைம் பேட்ரோல்’ உள்படப் பல முன்னணிச் சின்னத்திரைத் தொடர்களில் நடித்துத் பிரபலமானவர் இளம் நடிகை சஞ்சிதா உகாலே. இவர் மும்பை நகரின் அருகிலுள்ள நலசோபரா பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.இந்நிலையில், நேற்று சஞ்சிதா உகாலே தனது வீட்டின் அறையில் மின்விசிறியில் சேலையால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாகியும் அறை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது அவர் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த உள்ளூர் போலீசார், சஞ்சிதா உகாலேவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையின்படி இது தற்கொலை தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த போலீசார், அவர் எதற்காக இந்த அதிரடி முடிவை எடுத்தார், தற்கொலைக்கான பின்னணி மற்றும் காரணம் என்ன என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
22 வயதே ஆன இளம் இந்தி நடிகை சஞ்சிதா உகாலேவின் இந்த திடீர் மறைவு ஒட்டுமொத்த பாலிவுட் சின்னத்திரை உலகினரையும், அவரது ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஜினியின் ‘தர்மன்’ 2-ஆம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம்: வீடியோவை வெளியிட்ட படக்குழு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:55:30 PM (IST)

தொடர்ந்து செல்போன் பயன்படுத்தியதால் வந்த வினை - நடிகை ஷகிலா வேதனை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:42:45 PM (IST)

கூடுதல் மின் கட்டணத்தால் தவெக ஆட்சியில் மக்கள் அவதி: நடிகை வைஷாலி விளாசல்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:22:23 PM (IST)

காதலரால் நார்சிசிஸ்டிக் கொடுமைக்கு ஆளானேன்: நடிகை அனுபமா பரமேஸ்வரன் வேதனை!
புதன் 12, ஆகஸ்ட் 2026 9:45:55 PM (IST)

குரங்குடன் நடிகர் விக்ரம் வெளியிட்ட வீடியோ: மு.க.முத்து வீட்டில் வனத்துறை விசாரணை!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:22:56 PM (IST)

மனைவி ஷாலினி தயாரிப்பில் நடிக்கும் அஜித்குமார்! - ஏ.கே. 64 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 7:58:11 PM (IST)

