» சினிமா » செய்திகள்
ஜெயிலர்-2 படப்பிடிப்பு நிறைவு: கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 4:26:37 PM (IST)

கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியாகி உலகளவில் 650 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்த ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ‘ஜெயிலர்-2’ படப்பிடிப்பு இன்றுடன் (ஏப்ரல் 21, 2026) முழுமையாக நிறைவடைந்தது.
படப்பிடிப்பு நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சமூக வலைதளங்களில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளது. இதில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் மற்றும் நடிகர் சிவ ராஜ்குமார் ஆகியோர் படக்குழுவினருடன் இணைந்து கேக் வெட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
ரஜினிகாந்த் தனது காட்சிகளை ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதமே முடித்துவிட்ட நிலையில், தற்போது மற்ற நடிகர்களின் காட்சிகளும் நிறைவு பெற்றுள்ளன. முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி ஆகியோருடன் மோகன்லால் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரும் இந்தப் பாகத்தில் இணைந்துள்ளது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கும் இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளன. படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் தனது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. இப்படம் வரும் ஆகஸ்ட் 12, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஓம்!
வெள்ளி 19, ஜூன் 2026 12:30:06 PM (IST)

சின்னத்திரை உலகில் பெரும் சோகம்: இளம் நடிகை சஞ்சிதா தற்கொலை!
செவ்வாய் 16, ஜூன் 2026 4:35:12 PM (IST)

எனது கருத்தை தவறாக புரிந்து கொண்டவர்கள் தான் தற்குறிகள் : நடிகர் மகேந்திரன்
செவ்வாய் 16, ஜூன் 2026 11:20:40 AM (IST)

குழந்தை போன்ற தூய்மையான உள்ளம் கொண்டவர்: பாரதிராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி!
புதன் 10, ஜூன் 2026 5:53:40 PM (IST)

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த்: படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்!
செவ்வாய் 9, ஜூன் 2026 11:55:56 AM (IST)

மாஸ்ட்ரோ இளையராஜாவுடன் மாரி செல்வராஜ் புதிய கூட்டணி?
திங்கள் 25, மே 2026 5:04:55 PM (IST)

