» சினிமா » செய்திகள்
ரஜினி படத்திலிருந்து சிபி சக்ரவர்த்தி விலகல்?
புதன் 15, ஏப்ரல் 2026 10:34:23 AM (IST)
ரஜினிகாந்தின் திரைப்படத்திலிருந்து இயக்குநர் சிபி சக்ரவர்த்தி, விலகியதற்கான காரணம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் ரஜினிகாந்தின் 173-வது திரைப்படத்தை இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளதாகச் சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியாயின. இப்படத்திற்கான முதல்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது தயாரிப்பு நிறுவனம் சிபி சக்ரவர்த்தியை மாற்றியுள்ளதாகத் தெரிகிறது. அவருக்குப் பதிலாக, அஷ்வத் மாரிமுத்து ரஜினி 173 திரைப்படத்தை இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
அடுத்தடுத்து இயக்குநர்கள் மாற்றப்படுவது ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சிபி சக்ரவர்த்தி விலகியதற்கான காரணம் குறித்துப் பல்வேறு யூகங்கள் உலா வருகின்றன. குறிப்பாக, சிபி சக்ரவர்த்தி தெலுங்கு நடிகர் நானியை வைத்து ஒரு திரைப்படம் இயக்கத் திட்டமிட்டிருந்ததாகவும், அதற்கான முன் தயாரிப்புப் பணிகளுக்கு அதிக அளவில் செலவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அந்தத் தெலுங்குத் தயாரிப்பு நிறுவனம் கொடுத்த அழுத்தம் மற்றும் கால அவகாசம் காரணமாகவே, அவர் ரஜினி 173 படத்திலிருந்து விலக நேரிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மறுபுறம், அஷ்வத் மாரிமுத்து நடிகர் சிலம்பரசனின் 51-வது திரைப்படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. எனவே, ரஜினி படத்தை இயக்க வேண்டுமானால், அவர் ஏஜிஎஸ் நிறுவனத்திடம் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இதனால், அஷ்வத் மாரிமுத்து ரஜினி படத்தை இயக்குவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரபல நடிகர் திலீப் ராஜ் மாரடைப்பால் மறைவு : கன்னடத் திரையுலகில் சோகம்!
புதன் 13, மே 2026 3:58:15 PM (IST)

சாதி ஆதிக்கம், பண பலத்தை நொறுக்கியுள்ளது தவெக வெற்றி - பா.ரஞ்சித் வாழ்த்து!
செவ்வாய் 5, மே 2026 5:05:04 PM (IST)

விசில் ஊதி சூரியனையே அணைத்து புதிய அரசு விடிகிறது! - விஜய்க்கு பார்த்திபன் வாழ்த்து!
செவ்வாய் 5, மே 2026 12:33:35 PM (IST)

ஜனநாயகன்' படக் கசிவு விவகாரம்: துணிக்கடை மேலாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!
வெள்ளி 1, மே 2026 11:04:13 AM (IST)

100 மில்லியன் பார்வையாளர்கள்: யூடியூப்பில் கூலி படத்தின் பவர்ஹவுஸ் பாடல் புதிய சாதனை!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:05:45 PM (IST)

இறுதி கட்டத்தை எட்டிய ஜன நாயகன் சென்சார் பணிகள்: மே 8-ல் ரிலீஸ்? - ரசிகர்கள் உற்சாகம்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:03:15 PM (IST)

