» சினிமா » செய்திகள்
புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மறைவு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:40:08 PM (IST)

இந்திய இசை உலகின் துருவ நட்சத்திரமும், புகழ்பெற்ற பின்னணி பாடகியுமான ஆஷா போஸ்லே (92), வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய இசை உலகின் மறக்க முடியாத குரல்களில் ஒன்றான ஆஷா போஸ்லேவின் மறைவு செய்திகேட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயற்குழு மிகுந்த துயரம் கொள்கிறது. எட்டு தசாப்தங்களுக்கும் மேலாகத் திரையிசை உலகில் கோலோச்சிய அவர், இந்தி, தமிழ் எனப் பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, உலகெங்கும் உள்ள இசை ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர்.
கசல், பாப், பஜன் என அனைத்து இசை வடிவங்களிலும் தனது அபார திறமையை வெளிப்படுத்தியவர். திரையிசைத் துறையின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது மற்றும் பல தேசிய விருதுகளைப் பெற்றவர். இசை வரலாற்றிலேயே அதிக பாடல்களைப் பதிவு செய்த கலைஞர் என்ற பெருமையுடன், இவரது பெயர் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.
இரங்கல்
அவரது மறைவு இந்திய கலாசார மற்றும் இசைத் துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்த துயரத்தில் வாடும் குடும்பத்தினருக்கும், இசை உலகினருக்கும், கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. ஆஷா போஸ்லேவின் புகழ் அவர் பாடிய காலத்தால் அழியாத பாடல்கள் மூலம் என்றும் நிலைத்து நிற்கும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஜினியின் ‘தர்மன்’ 2-ஆம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம்: வீடியோவை வெளியிட்ட படக்குழு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:55:30 PM (IST)

தொடர்ந்து செல்போன் பயன்படுத்தியதால் வந்த வினை - நடிகை ஷகிலா வேதனை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:42:45 PM (IST)

கூடுதல் மின் கட்டணத்தால் தவெக ஆட்சியில் மக்கள் அவதி: நடிகை வைஷாலி விளாசல்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:22:23 PM (IST)

காதலரால் நார்சிசிஸ்டிக் கொடுமைக்கு ஆளானேன்: நடிகை அனுபமா பரமேஸ்வரன் வேதனை!
புதன் 12, ஆகஸ்ட் 2026 9:45:55 PM (IST)

குரங்குடன் நடிகர் விக்ரம் வெளியிட்ட வீடியோ: மு.க.முத்து வீட்டில் வனத்துறை விசாரணை!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:22:56 PM (IST)

மனைவி ஷாலினி தயாரிப்பில் நடிக்கும் அஜித்குமார்! - ஏ.கே. 64 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 7:58:11 PM (IST)

