» சினிமா » செய்திகள்
மீண்டும் தொடங்குகிறதா இந்தியன் 3? - இயக்குநர் ஷங்கரின் அதிரடி முடிவு!
புதன் 11, மார்ச் 2026 4:28:59 PM (IST)
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘இந்தியன் 3’ படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கப்படுவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘இந்தியன் 2’ படத்தின் இறுதியில் ‘இந்தியன் 3’ படத்திற்கான முன்னோட்டக் காட்சிகள் (Trailer) இணைக்கப்பட்டிருந்தன. இருப்பினும், ‘இந்தியன் 2’ மற்றும் ஷங்கரின் அடுத்த படைப்பான ‘கேம் சேஞ்சர்’ ஆகிய படங்கள் எதிர்பாராத தோல்வியைத் தழுவின. இதனால் ‘இந்தியன் 3’ படத்தின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
தற்போது தனது கனவுத் திட்டமான ‘வேள்பாரி’ படத்தின் பணிகளில் ஷங்கர் தீவிரம் காட்டி வருகிறார். ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் கவனம் செலுத்தியதே முந்தைய படங்களின் தோல்விக்குக் காரணம் எனக் கருதும் அவர், இனி ஒரு நேரத்தில் ஒரு படத்தில் மட்டுமே பணியாற்றுவது என்ற உறுதியான முடிவில் இருக்கிறார். "வேள்பாரி பணிகளைத் தொடங்கிவிட்டால், மீண்டும் இந்தியன் 3 பக்கம் வர இயலாது" என்று அவர் தயாரிப்புத் தரப்பிடம் கறாராகத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
‘இந்தியன் 3’ படத்திற்கு இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் (Post-production) மீதமுள்ளன. பெரும் முதலீடு செய்யப்பட்டுள்ளதால், தயாரிப்பு நிறுவனம் இந்தப் பணிகளை விரைவில் முடிக்கத் தீவிரம் காட்டி வருகிறது. இதனால், ‘இந்தியன் 3’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஜினியின் ‘தர்மன்’ 2-ஆம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம்: வீடியோவை வெளியிட்ட படக்குழு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:55:30 PM (IST)

தொடர்ந்து செல்போன் பயன்படுத்தியதால் வந்த வினை - நடிகை ஷகிலா வேதனை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:42:45 PM (IST)

கூடுதல் மின் கட்டணத்தால் தவெக ஆட்சியில் மக்கள் அவதி: நடிகை வைஷாலி விளாசல்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:22:23 PM (IST)

காதலரால் நார்சிசிஸ்டிக் கொடுமைக்கு ஆளானேன்: நடிகை அனுபமா பரமேஸ்வரன் வேதனை!
புதன் 12, ஆகஸ்ட் 2026 9:45:55 PM (IST)

குரங்குடன் நடிகர் விக்ரம் வெளியிட்ட வீடியோ: மு.க.முத்து வீட்டில் வனத்துறை விசாரணை!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:22:56 PM (IST)

மனைவி ஷாலினி தயாரிப்பில் நடிக்கும் அஜித்குமார்! - ஏ.கே. 64 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 7:58:11 PM (IST)

