» சினிமா » செய்திகள்
தணிக்கையில் தொடரும் இழுபறி: ஜனநாயகன் படத்திற்கு மீண்டும் ஒரு சிக்கல்!
செவ்வாய் 10, மார்ச் 2026 8:14:13 PM (IST)
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கை வாரியத்தில் நிலவும் சிக்கல்கள் ஓய்ந்தபாடில்லை.
நடிகர் விஜய்யின் கடைசி படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’, கடந்த ஜனவரி 9-ம் தேதி பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரத் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் "இந்திய இறையாண்மைக்கு எதிராக" இருப்பதாகக் கூறி, தணிக்கை வாரியம் படத்திற்குச் சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டது.
இந்த விவகாரத்தைத் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றது. அங்கு நீண்ட இழுபறி நீடித்த நிலையில், வழக்கை வாபஸ் பெற்ற தயாரிப்பு நிறுவனம், படத்தை மறுதணிக்கை (Re-vising Committee) செய்ய விண்ணப்பித்தது.
திட்டமிட்டபடி ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைத் தணிக்கை வாரியத்தின் மறுஆய்வுக் குழுவினர் நேற்று மதியம் பார்க்கவிருந்தனர். இதற்காகத் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர்.
ஆனால், கடைசி நேரத்தில் இந்த மறுஆய்வு திடீரென தள்ளிவைக்கப்பட்டது. ஆய்வுக்கு வரவிருந்த தணிக்கை அதிகாரி ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுஆய்வு தள்ளிவைக்கப்பட்டதால் வருகிற மார்ச் 17-ம் தேதி அன்று மீண்டும் தணிக்கை நடைபெறும் எனத் தெரிகிறது. சான்றிதழ் கிடைத்த பிறகே வெளியீட்டுத் தேதியை அறிவிக்க முடியும் என்பதால், படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தல் பணிகள் மற்றும் நடத்தை விதிகளைக் கருத்தில் கொண்டு, தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரைக்கு வரும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஜினியின் ‘தர்மன்’ 2-ஆம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம்: வீடியோவை வெளியிட்ட படக்குழு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:55:30 PM (IST)

தொடர்ந்து செல்போன் பயன்படுத்தியதால் வந்த வினை - நடிகை ஷகிலா வேதனை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:42:45 PM (IST)

கூடுதல் மின் கட்டணத்தால் தவெக ஆட்சியில் மக்கள் அவதி: நடிகை வைஷாலி விளாசல்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:22:23 PM (IST)

காதலரால் நார்சிசிஸ்டிக் கொடுமைக்கு ஆளானேன்: நடிகை அனுபமா பரமேஸ்வரன் வேதனை!
புதன் 12, ஆகஸ்ட் 2026 9:45:55 PM (IST)

குரங்குடன் நடிகர் விக்ரம் வெளியிட்ட வீடியோ: மு.க.முத்து வீட்டில் வனத்துறை விசாரணை!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:22:56 PM (IST)

மனைவி ஷாலினி தயாரிப்பில் நடிக்கும் அஜித்குமார்! - ஏ.கே. 64 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 7:58:11 PM (IST)

