» சினிமா » செய்திகள்
தேர்தலுக்கு முன்னதாகவே வெளியாகும் ரஜினி-கமல் படத்தின் புரோமோ!
வியாழன் 12, பிப்ரவரி 2026 3:39:24 PM (IST)

இன்பநிதி தயாரிப்பில் ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தின் புரோமோவை தேர்தலுக்கு முன்னதாகவே வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் இரு துருவங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரே படத்தில் இணையப்போவதாக வெளியாகி வரும் தகவல்கள், ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயிலர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இந்தப் படத்தை இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி இந்தப் படத்தின் முதன்மை தயாரிப்பாளராகப் களமிறங்க உள்ளதாகத் தெரிகிறது. இவருடன் இணைந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோரும் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
இந்தப் படத்தின் மற்றொரு சுவாரசியமான தகவல் என்னவென்றால், ரஜினி மற்றும் கமல் இருவருமே படத்திற்காகத் தனியாகச் சம்பளம் வாங்காமல், படத்தின் லாபத்தில் பங்கு (Profit Sharing) என்ற அடிப்படையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காகச் சென்னையில் பிரமாண்டமான கார் மெக்கானிக் ஷாப் மற்றும் ஹோட்டல் போன்ற அரங்குகள் (Sets) ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன.
இப்படத்தின் புரோமோ படப்பிடிப்பு சென்னையில் ரகசியமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் சுமார் 15 நாட்கள் படமாக்கப்பட உள்ளன. வரும் தேர்தலுக்கு முன்னதாகவே புரோமோவை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
தற்போது ரஜினிகாந்த் 'ஜெயிலர்-2' படத்தின் பணிகளில் பிஸியாக உள்ளார். இதன் பணிகள் முடிந்தவுடன், மார்ச் மாதத்தில் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 173-வது படத்தின் (Thalaivar 173) படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினியின் 173-வது படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குவது ஒருபுறம் இருக்க, கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஓம்!
வெள்ளி 19, ஜூன் 2026 12:30:06 PM (IST)

சின்னத்திரை உலகில் பெரும் சோகம்: இளம் நடிகை சஞ்சிதா தற்கொலை!
செவ்வாய் 16, ஜூன் 2026 4:35:12 PM (IST)

எனது கருத்தை தவறாக புரிந்து கொண்டவர்கள் தான் தற்குறிகள் : நடிகர் மகேந்திரன்
செவ்வாய் 16, ஜூன் 2026 11:20:40 AM (IST)

குழந்தை போன்ற தூய்மையான உள்ளம் கொண்டவர்: பாரதிராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி!
புதன் 10, ஜூன் 2026 5:53:40 PM (IST)

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த்: படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்!
செவ்வாய் 9, ஜூன் 2026 11:55:56 AM (IST)

மாஸ்ட்ரோ இளையராஜாவுடன் மாரி செல்வராஜ் புதிய கூட்டணி?
திங்கள் 25, மே 2026 5:04:55 PM (IST)

