» சினிமா » செய்திகள்
கூலி திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமம் ரூ.81 கோடிக்கு விற்பனை
புதன் 18, ஜூன் 2025 4:29:29 PM (IST)
கூலி திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமம் ரூ.81 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இதுவே அதிக தொகைக்கு விற்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்றும் கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. படத்தின் டப்பிங் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது.
படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் மற்றும் "சிக்கிடு" வைப் பாடலின் ப்ரோமோ வீடியோ என அனைத்தும் இணையத்தில் வைரலானது. இப்படத்தின் முதல் பாடல் இந்த வார இறுதிக்குள் வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகின.
இந்நிலையில், கூலி திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமம் ரூ.81 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவே அதிக தொகைக்கு விற்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்றும் கூறப்படுகிறது. இதைத்தவிர, அண்டை மாநிலங்களின் விநியோகிஸ்தர்களுக்கான உரிமமும் அதிக தொகைக்கு பேசப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சூப்பர் குட் பிலிம்ஸ் - விஷால் படம்: பூஜையுடன் தொடக்கம்
திங்கள் 14, ஜூலை 2025 5:26:22 PM (IST)

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்
திங்கள் 14, ஜூலை 2025 11:17:58 AM (IST)

சிவகார்த்திகேயன் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்கும் : இயக்குநர் வெங்கட் பிரபு தகவல்!
திங்கள் 14, ஜூலை 2025 10:28:48 AM (IST)

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்
ஞாயிறு 13, ஜூலை 2025 11:05:42 AM (IST)

நடிகை வனிதா படத்தில் அனுமதியின்றி பாடல் : வழக்கு தொடர்ந்தார் இளையராஜா!
வெள்ளி 11, ஜூலை 2025 12:35:37 PM (IST)

விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா? நயன்தாரா விளக்கம்!
வியாழன் 10, ஜூலை 2025 5:41:10 PM (IST)
