» சினிமா » செய்திகள்

தனுஷ்- ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து: நீதிமன்றம் தீர்ப்பு!

வியாழன் 28, நவம்பர் 2024 11:54:40 AM (IST)

நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நடிகா் தனுஷ் - ஐஸ்வா்யா இருவருக்கும் விவாகரத்து வழங்குவதாகவும், கடந்த 2004-ஆம் ஆண்டு நவ. 18-ஆம் தேதி நடைபெற்ற அவா்களின் திருமண பதிவை ரத்து செய்வதாகவும் சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

நடிகா் ரஜினியின் மகளும், இயக்குநருமான ஐஸ்வா்யாவை கடந்த 2004-இல் நடிகா் தனுஷ் காதலித்து மணந்தாா். இவா்களுக்கு, இரு மகன்கள் உள்ளனா். சில ஆண்டுகளுக்கு முன் தனுஷ், ஐஸ்வா்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பிரிவதாக, 2022-இல் அறிவித்தனா்.

தொடா்ந்து இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி, கடந்த ஏப்ரலில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நேரில் ஆஜராக மூன்று முறை உத்தரவிட்டும் இருவரும் ஆஜராகவில்லை.

இந்த வழக்கு, கடந்த நவ. 21-ஆம் தேதி நீதிபதி சுபாதேவி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனுஷ், ஐஸ்வா்யா ஆகியோா் ஆஜராகினா். அவா்களிடம் நீதிபதி, தனித்தனியாக விசாரணை நடத்தினாா். பின், இந்த விவகாரத்தில் சுயமாக சிந்தித்து, ஒரு முடிவை எடுக்கும் வகையில், உங்களுக்கு ஆறு மாதம் அவகாசம் வழங்கப்பட்டது. இப்போதும் பரஸ்பர விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருக்கிறீா்களா அல்லது உங்கள் முடிவில் ஏதேனும் மாற்றம் உள்ளதா என கேட்டாா்.

அதற்கு இருவரும், எங்கள் முடிவில் எந்த மாற்றமும் இல்லை; பரஸ்பர விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருக்கிறோம் எனத் தெரிவித்தனா். மேலும், நீதிமன்ற ஆவணங்கள், பதிவேட்டில் கையொப்பமிட்டனா். இதைப் பதிவு செய்த நீதிபதி, இந்த வழக்கில் நவ. 27-இல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவித்தாா்.

அதன்படி இந்த வழக்கில் இருவருக்கும் விவாகரத்து வழங்குவதாகவும், கடந்த 2004-ஆம் ஆண்டு நவ.18-ஆம் தேதி நடைபெற்ற திருமண பதிவை ரத்து செய்வதாகவும் நீதிபதி நேற்று தீா்ப்பளித்தாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


CSC Computer Education



Thoothukudi Business Directory