» சினிமா » செய்திகள்

இருநாட்டு உறவுக்கு அச்சுறுத்தல் : பிரபல நடிகை கைது!

செவ்வாய் 15, ஏப்ரல் 2025 5:54:30 PM (IST)

வங்கதேசம் - சவுதி அரேபியா இருநாட்டு உறவுக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாக பிரபல வங்கதேச நடிகை கைது செய்யப்பட்டுள்ளார். 

வங்கதேசத்தை சேர்ந்த பிரபல நடிகை மேஹ்னா ஆலம். மாடலிங் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்த இவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு மிஸ் எர்த் பங்களாதேஷ் பட்டத்தை வென்றுள்ளார்.

வங்கதேசத்தில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பணியாற்றிய திருமணமான அதிகாரி ஒருவரை மேஹ்னா காதலித்து வந்தார். ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மேஹ்னா அந்த அதிகாரியிடம் கேட்டுள்ளார். ஆனால் அந்த அதிகாரி அதற்கு மறுத்துவிட்டார்.

இந்நிலையில் மேஹ்னா ஆலமை டாக்காவில் உள்ள அவரது வீட்டில் வைத்து வங்கதேச போலீசார் நேற்று நள்ளிரவு கைது செய்தனர். வங்கதேசம், சவுதி அரேபியா இடையேயான இருநாட்டு உறவுக்கு அச்சுறுத்தலாக விளங்குவதால் மேஹ்னா சிறப்பு அதிகார சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மேஹ்னாவை 30 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே மேஹ்னாவின் கைதுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டங்கள் எழுந்துள்ளன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

CSC Computer Education




Thoothukudi Business Directory