» சினிமா » செய்திகள்
இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் மறைவு: வைரமுத்து இரங்கல்!!
புதன் 9, ஏப்ரல் 2025 5:09:52 PM (IST)
போதிமரம் புத்தனுக்குப் பேர் சொன்னதுபோல் பனைமரம் குமரி அனந்தனுக்குப் பேர்சொல்லும் என்று குமரி அனந்தன் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது: இலக்கியச் செல்வர் இறந்துவிட்டாரா? தகைசால் தமிழர் தவறிவிட்டாரா? இதயம் பதறுகிறது. அரசியல்வாதிகளுக்குள் ஓர் இலக்கியவாதி இலக்கியவாதிகளுக்குள் ஓர் அரசியல்வாதி தமிழுக்காக ஒன்றிய அரசிடம் ஓயாமல் போராடிய உரிமைவீரர் குமரி அனந்தன்.
போதிமரம் புத்தனுக்குப் பேர் சொன்னதுபோல் பனைமரம் குமரி அனந்தனுக்குப் பேர்சொல்லும். நடைப் பயணங்களால் நாடுசுற்றிய நாயகன் கண்மூடிக்கொண்டு கேட்டால் அவர்பேச்சு உரைநடைச் சங்கீதமாய் ஒலிக்கும் ஒரு தமிழாளன் தவறிவிட்டான். தளராத கொள்கையாளன் தவறிவிட்டான் என்று சோகம் கப்புகிறது. அவரை இழந்துவாடும் குடும்பத்தார் அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல். அனந்தன் என்றால் முடிவற்றவன் அனந்தனும் முடிவற்றவர்தான் தமிழிலும் புகழிலும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெயிலர் 2: மீண்டும் ரஜினியுடன் இணையும் ஃபகத் ஃபாசில்!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 5:10:24 PM (IST)

எஸ்டிஆர் 49 படத்தில் எங்களது அதிரடியைப் பார்க்கலாம் : சந்தானம்!
வியாழன் 24, ஏப்ரல் 2025 4:39:59 PM (IST)

பிராமண சமூகத்தைப் பற்றி அவதூறு கருத்து: மீண்டும் மன்னிப்பு கோரிய அனுராக் காஷ்யப்!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 4:31:22 PM (IST)

சூர்யாவின் ரெட்ரோ’ ஒரு முழுமையான காதல் கதை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 11:15:33 AM (IST)

இந்தியாவின் தொடா்பு மொழி ஆங்கிலம்: தக் லைஃப் படவிழாவில் கமல்ஹாசன் பேச்சு
சனி 19, ஏப்ரல் 2025 3:35:06 PM (IST)

வாய்ப்பு வரும்போது விட்டுவிடாதீர்கள்: ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு
சனி 19, ஏப்ரல் 2025 12:03:23 PM (IST)
