» சினிமா » செய்திகள்

இந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகர் பிரபாஸ்: இரண்டாவது இடத்தில் விஜய்!

சனி 23, நவம்பர் 2024 11:32:34 AM (IST)



இந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகர்கள் பட்டியலில் பிரபாஸ் முதலிடமும், விஜய் இரண்டாவது இடமும் பிடித்துள்ளனர்.

ஆர்மேக்ஸ் மீடியா என்ற தனியார் நிறுவனம் மிகவும் பிரபலமான நடிகர், நடிகைகளைப் பற்றி அவ்வப்போது ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் வெளியிட்ட ஆய்வின் படி, ஷாருக் கான், சல்மான் கான் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களைப் பின்னுக்குத் தள்ளி நடிகர் பிரபாஸ், முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவர் நடித்து சமீபத்தில் வெளியான ‘கல்கி 2898 ஏடி’ படம் வெற்றி பெற்றதால், இந்த புகழ் அவருக்கு கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நடிகர் விஜய், இரண்டாவது இடத்திலும் ஷாருக்கான், என்.டி.ஆர், அஜித்குமார் ஆகியோர் 3, 4, 5 வது இடங்களையும் அல்லு அர்ஜுன் 6 வது இடத்தையும் மகேஷ் பாபு, சூர்யா, ராம்சரண் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளனர். சல்மான்கான் நடித்து இந்த வருடம் படங்கள் ஏதும் வெளியாகவில்லை என்பதால் அவர் முதல் இடங்களுக்குள் வரவில்லை என்று கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


CSC Computer Education



Thoothukudi Business Directory