» சினிமா » செய்திகள்

போயஸ் கார்டனில் ரஜினியுடன் சீமான் திடீர் சந்திப்பு

வெள்ளி 22, நவம்பர் 2024 12:11:38 PM (IST)



போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசினார். 

சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்திற்கு சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஜினிகாந்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் திரையுலகை பற்றியும் தற்போதைய அரசியல் சூழ்நிலை பற்றியும் ரஜினிகாந்த்தும் சீமானும் பேசிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய காலங்களில் ரஜினிகாந்த்தின் அரசியல் வருகையை நாம் தமிழர் கட்சியின் சீமான் கடுமையாக விமர்சித்து பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

தனது பிறந்தநாளன்று நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க சீமான் நேரம் கேட்டிருந்தார். ஆனால், அன்றைய தினம் படப்பிடிப்பு காரணமாக சந்திக்க முடியவில்லை. இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்தை சீமான் இன்று சந்தித்துள்ளார். இந்த திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை, இந்த சந்திப்பின்போது அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

CSC Computer Education




Thoothukudi Business Directory