» சினிமா » செய்திகள்

சூரி, சசிகுமார் நடித்துள்ள கருடன் ட்ரெய்லர் வெளியீடு!

செவ்வாய் 21, மே 2024 4:53:27 PM (IST)

சூரி, சசிகுமார் நடித்துள்ள ‘கருடன்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

வெற்றிமாறன் கதையில் சூரி நடித்துள்ள படம் ‘கருடன்’. இந்தப் படத்தை ‘எதிர் நீச்சல்’, ‘காக்கிச் சட்டை’, ‘கொடி’, ‘பட்டாசு’ படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். படத்தில் சூரி தவிர்த்து, சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

இந்நிலையில் படத்தின் ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. படம் இம்மாதம் 31-ம் தேதி திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது. ட்ரெய்லர் வீடியோ:


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

CSC Computer Education





Thoothukudi Business Directory