» சினிமா » செய்திகள்

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ பொங்கல் ரிலீஸ் : தயாரிப்பாளர் உறுதி!

சனி 31, ஆகஸ்ட் 2024 4:29:18 PM (IST)



அஜித் நடித்து வரும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று தயாரிப்பாளர் உறுதிப்படுத்தி இருக்கிறார். 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. தற்போது வரை 40% காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பின் போதே, ‘பொங்கல் 2025 வெளியீடு’ என்று உறுதிச் செய்யப்பட்டது. 

இதனிடையே, மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக இருந்தது. ஆனால், படப்பிடிப்பு தாமதம் உள்ளிட்ட பல்வேறு குழப்பங்களால் தீபாவளி வெளியீடு சாத்தியமில்லை என்பது உறுதியாகிவிட்டது. இதனால் நவம்பர் அல்லது டிசம்பரில் தான் வெளியீடு இருக்கும் என லைகா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாத இடைவெளியில் அஜித் நடிப்பில் அடுத்த படம் வெளியீடு சாத்தியமில்லை என்ற பேச்சு நிலவியது. இதனை பொய்யாக்கும் விதமாக ஹைதராபாத்தில் நடைபெற்ற ‘மதுவடலரா 2’ படவிழாவில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் ரவிசங்கர் "‘குட் பேட் அக்லி’ திரைப்படம் பொங்கலுக்கு தமிழில் வெளியாகவுள்ளது. அதே சமயத்தில் தெலுங்கிலும் பிரம்மாண்டமாக வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் 2 மாத இடைவெளியில் அஜித்தின் 2 படங்கள் வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. விரைவில் ‘குட் பேட் அக்லி’ படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

CSC Computer Education




Thoothukudi Business Directory