» சினிமா » செய்திகள்
ரஜினியின் ‘வேட்டையன்’ முதல் பாடல் செப்.9ல் வெளியீடு!
சனி 7, செப்டம்பர் 2024 12:36:03 PM (IST)

ரஜினியின் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் முதல் பாடல் செப்டம்பர் 9-ம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்திருக்கிறது.
தா.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி, அமிதாப் பச்சன், ராணா, ஃபகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வேட்டையன்’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தப் படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இதனிடையே, நேற்று (செப்.6) முதல் ‘வேட்டையன்’ பணிகள் முடிவடையாத காரணத்தில் பட வெளியீட்டில் மாற்றம் இருக்கும் என தகவல் பரவியது. இதனால் அதே தேதியில் ‘கங்குவா’ வெளியாக கூடிய சூழல் உருவானது.
இந்த வதந்திகள் அனைத்தையும் பொய்யாக்கும் விதமாக, புதிய போஸ்டர் ஒன்றினை ‘வேட்டையன்’ படக்குழு வெளியிட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த போஸ்டரில் அக்டோபர் 10-ம் தேதி வெளியீடு என குறிப்பிட்டு வதந்திக்கு படக்குழு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மேலும், அனிருத் இசையமைப்பில் ‘மனசிலாயோ’ என்ற முதல் பாடல் செப்டம்பர் 9-ம் தேதி வெளியாகும் எனவும் ‘வேட்டையன்’ படக்குழு தெரிவித்திருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடத்தில் ஒரே சமயத்தில் வெளியாக இருக்கிறது ‘வேட்டையன்’.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதலர் தினம் கொண்டாடிய திரை நட்சத்திரங்கள்
சனி 15, பிப்ரவரி 2025 3:36:49 PM (IST)

ரஜினிகாந்த் ஒரு நல்ல நடிகரா?- ராம்கோபால் வர்மா சர்ச்சை பேச்சு
வியாழன் 13, பிப்ரவரி 2025 5:35:59 PM (IST)

விஜய் மீது முட்டையை வீச திட்டம் : ரசிகர்களுக்கு ரஜினி கண்டனம்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 5:54:19 PM (IST)

விடாமுயற்சி ரிலீஸ் : அஜித் ரசிகர்கள் உற்சாகம்!
வியாழன் 6, பிப்ரவரி 2025 3:25:22 PM (IST)

சர்வதேச திரைப்பட விழாவில் ராமின் பறந்து போ!
வெள்ளி 31, ஜனவரி 2025 5:27:44 PM (IST)

பராசக்தி டைட்டிலை யாரும் பயன்படுத்தக் கூடாது - நேஷனல் பிக்சர்ஸ் எச்சரிக்கை
வெள்ளி 31, ஜனவரி 2025 11:31:50 AM (IST)
