» சினிமா » செய்திகள்
ஜப்பானில் நெப்போலியன் மகன் திருமணம்: நெல்லை பெண்ணை மணந்தார்!
வெள்ளி 8, நவம்பர் 2024 5:17:37 PM (IST)

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடிகர் நெப்போலியன் மகன் திருமணம் நடந்தது. நடிகர் சரத்குமார், நடிகைகள் ராதிகா, சுஹாசினி, குஷ்பூ, உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
நடிகர் நெப்போலியனுக்கு தனுஷ், குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அதில் மூத்த மகன் தனுஷுக்கு சிறுவயதிலேயே தசை சிதைவு என்ற அரியவகை நோய் இருக்கிறது. இந்த நோய் ஒரு கட்டத்தில் தீவிரமாகி தனுஷால் நடக்க முடியாமல் போய்விட்டது. இதனால் சித்த வைத்தியம் மூலம் தன்னுடைய மகனுக்கு சிகிச்சை அளித்து வந்த நெப்போலியன் தன்னுடைய மகன் விருப்பத்திற்காக அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார்.
தனுஷூக்கும், திருநெல்வேலி மாவட்டத்தின் மூலக்கரைப்பட்டியை சேர்ந்த அக்ஷயா என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இவர்களது திருமணம் நேற்று (நவ.,7) ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்திய நேரப்படி காலை 8:10 மணிக்கு நடைபெற்றது.
இந்த திருமணத்தில் மணப்பெண்ணின் உறவினர்கள் மட்டுமின்றி திரையுலகை சேர்ந்த நடிகர் சரத்குமார், நடிகைகள் ராதிகா, சுஹாசினி, குஷ்பூ, மீனா, நடிகர் கார்த்தி அவரது மனைவி ரஞ்சனி, நடிகர் பாண்டியராஜன், அவரது மனைவி, நடிகர் விதார்த், முன்னாள் டிஜிபி ரவி, நடன இயக்குனர் கலா, நடிகர் வசந்த் ரவி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் இந்த திருமணத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தன்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்று ஒரு வீடியோவில் வருத்தப்பட்டு நெப்போலியனிடம் மன்னிப்பு கேட்டு பேசி இருக்கிறார். அதில், ''நெப்போலியன் சார் நீங்க எனக்கு ரொம்ப ஸ்பெஷல். என்னுடைய கஷ்டமான காலங்களில் என் கூட இருந்திருக்கீங்க. இந்த நேரத்தில் நான் கல்யாணத்திலிருந்து எல்லா வேலைகளையும் செய்து இருக்கணும். அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் வந்து உங்கள் எல்லோரையும் சந்திக்கிறேன் சார். இந்த நிகழ்வு உங்க மனசு மாதிரி ரொம்ப நல்லா நடக்கட்டும் சார். தனுஷ் தம்பி உங்களுக்கும் என்னுடைய திருமண வாழ்த்துக்கள்,'' என்று அந்த வீடியோவில் சிவகார்த்திகேயன் பேசி இருக்கிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அஜித்தின் குட்பேட் அக்லி ரிலீஸ் : ரசிகர்கள் உற்சாகம்
வியாழன் 10, ஏப்ரல் 2025 3:35:07 PM (IST)

தனுஷின் 56-ஆவது படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்!
வியாழன் 10, ஏப்ரல் 2025 10:45:02 AM (IST)

இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் மறைவு: வைரமுத்து இரங்கல்!!
புதன் 9, ஏப்ரல் 2025 5:09:52 PM (IST)

ஜெயலலிதாவுக்கு எதிராக நான் பேசியிருக்க கூடாது : நடிகர் ரஜினிகாந்த் சொல்கிறார்!
புதன் 9, ஏப்ரல் 2025 12:46:33 PM (IST)

ரஜினியின் கூலி ஆக.14ல் ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
வெள்ளி 4, ஏப்ரல் 2025 8:31:30 PM (IST)

பின்வாங்கியது தனுஷின் இட்லி கடை : அக்.1ல் ரிலீஸ்!
வெள்ளி 4, ஏப்ரல் 2025 4:03:45 PM (IST)
