» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பாலோ ஆனை தவிர்த்த இந்தியா : கம்பீர் - விராட் உற்சாக கொண்டாட்டம்!

செவ்வாய் 17, டிசம்பர் 2024 3:19:43 PM (IST)



ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் டெய்லண்டர்கள் பொறுப்பான பேட்டிங்கால் இந்தியா  பாலோ ஆனை தவிர்த்தது. 

ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி கபாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 445 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் கேஎல் ராகுல், ஜடேஜா ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினர்.

ராகுல் 84 ரன்னிலும் ஜடேஜா 77 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து இந்தியா பால் ஆனை தவிர்க்க போராடியது. கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பும்ரா- ஆகாஷ் தீப் பொறுப்புடன் ஆடினர். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசியில் பாலோ ஆனை தவிர்க்க 4 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஆகாஷ் தீப், தேர்ட் மேன் திசையில் பந்தை அடித்தார். அது பவுண்டரியாக மாறியது.

இதனால் இந்திய அணி பாலோ ஆனை தவிர்த்தது. இதனை ஓய்வு அறையில் இருந்த கவுதம் கம்பீர், விராட் கோலி சந்தோசத்தில் துள்ளி குதித்தனர். அவர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் பெரிய அளவில் ஆரவாரம் செய்தனர். வெற்றி பெற்றது போல ஒரு மகிழ்ச்சியை அவர்கள் வெளிப்படுத்தினர்.

பாலோ ஆனை தவிர்க்கவில்லை என்றால் ஆஸ்திரேலியா இந்தியாவை பேட்டிங் செய்ய அழைக்கும். இதனால் ஒரு நாள் முடிவில் இந்தியாவின் 10 விக்கெட்டுகளை வீழ்த்துவது ஆஸ்திரேலியாவுக்கு பெரிய விஷயாமாக இருக்காது. இப்போது பாலோ ஆனை தவிர்த்ததால் கண்டிப்பாக ஆஸ்திரேலிய அணி தான் பேட்டிங் செய்யும். இதனால் ஆட்டம் டிராவை நோக்கி செல்லும்.

பாலோ ஆன் தவிர்த்த சந்தோசத்தில் பேட் கம்மின்ஸ் வீசிய அடுத்த பந்தை ஆகாஷ் தீப் சிக்சருக்கு பறக்க விட்டார். இதனை ஓய்வு அறையில் இருந்த விராட் கோலி ஆச்சரியமுடன் பார்த்து சிரித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வெளிச்சமின்மை காரணமாக 4-வது நாள் போட்டி முடிவுக்கு வந்தது. இதனையடுத்து வெளி வந்த பும்ரா- ஆகாஷ் தீப்புக்கு சக வீரர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital



New Shape Tailors


CSC Computer Education







Thoothukudi Business Directory