» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் ஆஸி. கை ஓங்கியது: தோல்வி பாதையில் இந்திய அணி!
சனி 7, டிசம்பர் 2024 5:13:39 PM (IST)
ஆஸி சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதி வருகிறது. பெர்த் நகரில் முடிந்த முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், அடிலெய்ட் நகரில் நேற்று 2வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், போட்டியின் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி அதிர்ச்சி தந்தார்.
மற்ற வீரர்களும் சோபிக்கவில்லை. இதனால் முதல் இன்னிங்சில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன் எடுத்தது. பின் முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸி அணியின் துவக்க வீரர் உஸ்மான் கவாஜா, 13 ரன்னில் ஜஸ்பிரித் பும்ராவிடம் அவுட்டானார். ஆட்ட நேர இறுதியில் ஆஸி. ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன் எடுத்திருந்தது. நாதன் மெக்ஸ்வீனி 38, மார்னஸ் லபுஷனே 20 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 2ம் நாள் ஆட்டம் தொடர்கிறது.
ஆஸ்திரேலியாவில் அந்நாட்டு அணியுடன் 2வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இந்திய நட்சத்திர பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு நேற்று, 31வது பிறந்த நாள். ஆஸிக்கு எதிராக பந்து வீசிய பும்ராவின் அற்புத வீச்சில் திணறிய, அந்த அணியின் துவக்க வீரர் உஸ்மான் கவாஜா 13 ரன்னில் அவுட்டானார். இது, 2024ல் பும்ராவின் வேகத்தில் வீழ்ந்த 50வது விக்கெட்.
இந்தாண்டில் 50 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை பும்ரா நேற்று நிகழ்த்தினார். முன்னதாக, இந்தியா பேட்டிங் செய்தபோது, 10வது வீரராக களத்தில் குதித்த பும்ரா, 8 பந்துகளை எதிர்கொண்டு ரன் எடுக்காமல் பூஜ்யத்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இதன் மூலம் பிறந்த நாளில் டக் அவுட்டான 4வது இந்திய வீரர் என்ற அரிய சாதனையை பும்ரா நிகழ்த்தி உள்ளார். இதற்கு முன், சையத் கிர்மானி, வெங்கடபதி ராஜு, இஷாந்த் சர்மா ஆகியோர் பிறந்த நாளில் டக்அவுட் ஆகியுள்ளனர்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'பார்டர்-கவாஸ்கர் டிராபி' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் அடிலெய்டில் பகலிரவு போட்டியாக நடக்கிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 180 ரன் எடுத்தது. முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 86/1 ரன் எடுத்திருந்தது. மெக்ஸ்வீனி (38), லபுசேன் (20) அவுட்டாகாமல் இருந்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் பும்ரா பந்தில் மெக்ஸ்வீனி (39), ஸ்டீவ் ஸ்மித் (2) அவுட்டாகினர். பொறுப்பாக ஆடிய லபுசேன் (64) அரைசதம் கடந்தார். மிட்சல் மார்ஷ் (9), அலெக்ஸ் கேரி (15), கேப்டன் கம்மின்ஸ் (12) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய டிராவிஸ் ஹெட் (140) சதம் கடந்தார். சிராஜ் பந்தில் ஸ்டார்க் (18), போலந்து (0) அவுட்டாகினர். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 337 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இந்தியா சார்பில் பும்ரா, சிராஜ் தலா 4 விக்கெட் கைப்பற்றினர்.
இதன் பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இதனால் முக்கிய வீரரி்கள் ஆட்டமிழந்துள்ள நிலையில், தோல்வியைத தவிர்க்க இந்திய அணி கடுமையாக போராட வேண்டியுடள்ளது.