» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உறங்கிக் கொண்டிருந்த மிருகத்தை நியூசிலாந்து எழுப்பி விட்டுள்ளது: ஹேசில்வுட் சொல்கிறார்

புதன் 6, நவம்பர் 2024 9:46:38 PM (IST)

சொந்த மண்ணில் இந்திய அணியை முழுமையாக வீழ்த்தி, அதற்குள் உறங்கிக் கொண்டிருந்த மிருகத்தை நியூசிலாந்து எழுப்பியுள்ளதாக ஆஸ்திரேலிய பவுலர் ஹேசில்வுட் கூறியுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை உள்நாட்டில் 0-3 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 22-ந்தேதி பெர்த்தில் தொடங்குகிறது.

இந்த தொடருக்கு தயாராகும் 70 டெஸ்டில் விளையாடிய அனுபவசாலியான ஆஸ்திரேலிய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் 33 வயதான ஜோஷ் ஹேசில்வுட் அளித்த ஒரு பேட்டியில், ‘நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட தோல்வி இந்திய அணிக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் மிருகத்தை தட்டி எழுப்பியிருக்கும். அந்த மிருகம் (இந்திய அணியின் எழுச்சி) எப்போது வெளிவரும் என்பதை பார்க்க வேண்டும். 

3-0 என்ற கணக்கில் வெல்வதை விட 0-3 என்ற கணக்கில் இந்தியா தோல்வியை தழுவியது நல்லது. இதன் மூலம் அவர்களின் தன்னம்பிக்கை குறைந்திருக்கும். இருப்பினும் அந்த அணியில் சிலரை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஏற்கனவே ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். எனவே அது பற்றி அதிகம் கவனம் செலுத்த விரும்பவில்லை. எப்படியோ அவர்கள் நியூசிலாந்திடம் முழுமையாக தோற்றது எங்களுக்கு சாதகமாக இருக்கும்.

எல்லா பாராட்டுகளும் நியூசிலாந்து வீரர்களையே சாரும். அருமையான கிரிக்கெட்டை விளையாடினார்கள். இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வசப்படுத்துவது நம்ப முடியாத ஒன்று. அங்கு ஒரு போட்டியில் வெல்வதே மிகவும் கடினம். அப்படியிருக்க தொடரை 3-0 என்று கைப்பற்றியிருப்பது மிகப்பெரிய விஷயமாகும்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான மோதல் மிகப்பெரிய தொடர். ஒவ்வொரு முறையும் நாங்கள் அவர்களுடன் விளையாடும் போது ஆஷஸ் போட்டிக்கு இணையாக இருக்கும். ரசிகர்களின் வருகையும் அதிகமாக இருக்கும். டி.வி. ரேட்டிங்கும் எகிறும். எனவே இது முன்பு எப்போதையும் விட மிகப்பெரிய தொடராக அமையலாம்’ என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital



New Shape Tailors





Thoothukudi Business Directory