» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: சீனாவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி 3வது முறையாக சாம்பியன்!

வியாழன் 21, நவம்பர் 2024 11:43:07 AM (IST)



ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி இறுதி போட்டியில் சீனாவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் பிஹார் மாநிலம் ராஜ்கிர் பகுதியில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீனாவுடன் இன்று மோதியது. இதில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது.

இந்திய அணி சார்பில் 31-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை தீபிகா கோலாக மாற்றினார். இந்த தொடரில் அவர், அடித்த 11-வது கோலாக இது அமைந்தது. மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்திய அணி பட்டம் வெல்வது இது 3-வது முறையாகும். இதற்கு முன்னர் 2016 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் கோப்பையை வென்றிருந்தது. சீன அணி 3-வது முறையாக பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்து தொடரை 2-வது இடத்துடன் நிறைவு செய்தது. முன்னதாக 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஜப்பான் - மலேசியா அணிகள் மோதின. இதில் ஜப்பான் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital

New Shape Tailors




Thoothukudi Business Directory